பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழ் நாவல்

அமைக்கச் செய்தார் என்ற செய்திகளும் அவற்ருல் தெரிய வருகின்றன. .

சிவகாமியின் சபதம்

இந்தச் செய்திகளை யெல்லாம் வைத்துக்கொண்டு ஓர் அழகிய நாவலேப் படைத்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். சிவகாமியின் சபதம்’ என்ற பெரிய சரித்திர நாவலே அவர் நமக்குத் தந்திருக்கிருர். முன்னே சொன்னது போல, சரித்திர நாவல்களே எழுதவேண்டும் என்ற ஆர்வத் தோடு பல வரலாற்று நூல்களே அவர் படித்தார். அவற்றில் வரும் பாத்திரங்களையும், தாமே கற்பனையினல் படைத்த பாத்திரங்களேயும் வைத்துக்கொண்டு. சரித்திர நிகழ்ச்சிகளில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, புதிய நிகழ்ச்சிகளையும் இணைத்து அற்புத சரித்திரக் கதையாக (Historical Romance) go arqpóðr. Log' -oorG. களுக்கு மேலாக இந்தக் கதையின் கரு அவருடைய உள்ளத்தில் பதிந்து வளர்ந்து, பிறகு உருப்பெற்றுக் "கல்கி'ப் பத்திரிகையில் வாரந்தோறும் தொடர் கதையாக வெளியாயிற்று. இதற்கு முன்பு அவர் பார்த்திபன் கனவு’ என்ற சரித்திர நாவலே எழுதினர். அதைவிட இது சுவையில் முதிர்ந்ததாகவும் கதையில் விரிந்ததாகவும் இருக்கிறது. -

முதல் முதலாக நல்ல முறையில் தமிழில் வெற்றியுடன் சரித்திர காவல் எழுதியவர் கல்கி. சரித்திர காவல் எழுது வதற்குச் சரித்திர அறிவும் காவல் எழுதும் கற்பனைத் திறமும் வேண்டும். இந்த இரண்டும் குறைவற நிரம்பிய கல்கி மூன்று பெரிய சரித்திர நாவல்களை எழுதிப் புகழ்பெற்ருர். -