பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

107

சிவகாமியின் சபதத்தில் வரும் மகேந்திரரும் மாமல்லரும் புலிகேசியும் பரஞ்சோதியும் வரலாற்றில் வருபவர்கள். சிவகாமியும் ஆயனரும் நாகநந்தியும் கல்கியின் அழகிய புதிய படைப்புகள், நாவலின் பெயரில் ஒளிரும் சிவகாமி ஆயனரின் மகள்; மாமல்லரின் காதலி. அவளிடம் மாமல்லருக்கு உண்டான காதலே, வாதாபியை அழித்தல் பெரு வீரத்துக்குக் காரணம். தம் காதலியின் சபதத்தை நிறைவேற்றும் பொருட்டே அவர் வாதாபிப் பெரும் போரைப் புரிந்தார் என்று புனைகிறார் கல்கி.

சபதம்


இந்த நாவலில் வரும் கொடிய பாத்திரம்—வில்லன்—ஆகிய நாகநந்தியின் முன், வாதாபியில் சிறைப்பட்டிருந்த சிவகாமி சபதம் செய்கிருள்:

"அடிகளே! கேளுங்கள்: இந்த வாதாபி நகரத்தை விட்டு நான் எப்போது கிளம்புவேன் தெரியுமா? பயங்கொள்ளி என்று நீங்கள் அவதூறு சொல்லிய வீரமாமல்லர் ஒருநாள் இந்நககர் மீது படை எடுத்து வருவார். நரிக் கூட்டத்தின்மீது பாயும் சிங்கத்தைப்போலச் சளுக்கிய சைனியத்தைச் சின்ன பின்னம் செய்வார். நாற்சந்தி மூலைகளில் என்னை நடனம் ஆடச் செய்த பாதகப் புலிகேசியை யமனுலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து ஸ்திரீ புருஷர்களைக் கையைக்கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை நிறுத்திச் சாட்டை யால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக் கிடக்கும். இந்தச் சளுக்கத் தலை நகரின் மாடமாளிகை கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும். இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்துவிட்டுப் பிறகுதான் இந்த ஊரை விட்டுக் கிளம்புவேன். சளுக்கப் பதர்களை வென்று