பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

111

3. கல்கியின் நாவல்கள் 111

எழுந்தருளச் செய்யும் கருத்தும் அவருக்கு உண்டு (ப. 132). -

கலையார்வம்

வர் காலம் வரையில் செங்கல்லாலும் மரத் தாலுமே கோயில்களைக் கட்டி வந்தார்கள். நூறு ஆண்டுகளில் அவை சிதைந்து மறைந்து போய்விடும். அவர் அழிவில்லாத கற்கோயில்களைக் கட்டுகிருர் (ப. 131), அவர் இசை தெரிந்தவர். சித்திரம், கடனம், இலக்கியம் எல்லா வற்றிலும் வல்லவர். பகைவர்களுடைய படையெடுப்பு ஏற்படும் என்ற கினைவே இன்றிக் கலையை வளர்ப் பதிலேயே காலத்தைக் கழித்தார். இதை அவரே ஒரு சமயம் தம்முடைய புதல்வரிடம் கூறி இரங்குகிருர் (ப. 120). .புவிகேசி கலேயின் உயர்வை அறியாமல் கலைஞர்களே அவமதித்தபோது கலையின் பெருமையை அவனுக்கு அறிவுறுத்துகிருர். அவர் ஆணையை ஒருவன் மறுத்தால் உடனே அவனைச் சிரச்சேதம் செய்யும்படி கட்டளே யிடும் அவர், அந்த மறுப்புச் செந்தமிழ்க் கவிதை யாக வரும்போது மறுத்தவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது; அப்பரிடம் அவருக்கு இப்படித்தானே பக்தி விளைகிறது? இதைச் சளுக்க அரசனிடம் எடுத்துச் சொல்கிருர் (ப. 538). அந்தப் புலிகேசி காஞ்சி நகரத்தின் செல்வச்சிறப்பில் ஈடுபட்டு, தன் சாம்ராஜ்யம் முழுவதும் எடுத்துக்கொண்டு அதற்கு மாற்முக அந்த ககரத்தைத் தந்தால் பெற்றுக் கொள்வ தாகச் சொல்கிருன். மகேந்திரர் அதற்கு எதிரே தம்முடைய அவாவைக் கூறுகிருர், 'திவ்யமாக இந்தக் காஞ்சி நகரை எடுத்துக் கொள்ளுங்கள்; அதற்கு மாற்ருக உங்கள் இராஜ்யம் முழுவதையும் எனக்குக் கொடுக்க வேண்டாம். அஜந்தா மலையையும் அதன்