பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தமிழ் நாவல்

குகைகளையும் கொடுத்தால் போதும்" என்கிருர் (ப. 563). கல்விலுைம் சுண்ணும்பினலும் மண்ணிலுைம் மரத் திலுைம் கட்டிய மாநகர்க் கட்டிடங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இடிந்து தகர்ந்து போனலும் போகலாம்; அஜந்தா மலைக் குகைகளில் எழுதிய அழியா வர்ண சித்திரங்கள் நீடுழி காலம் இருக்கும்' என்பது அவர் கருத்து. புலிகேசி காஞ்சியின்மேல் படையெடுத்து வருவதற்கு முன்பே அஜந்தாச் சித்திரங்களைப் பார்க்கும் பொருட்டு அவனேடு தோழமை கொள்ள வேண்டு. மென்று நினைத்திருந்தவர் அவர் (ப. 137).

அரசியல் தந்திரம்

வீணே மக்களப் பலி கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தால், சளுக்கிய மன்னன் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது வெளியில் வந்து அவனோடு போர் புரியாமல் உள்ளே இருந்தார். இப்படி இருப்பது: தவறு என்று மாமல்லர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. (ப. 533). இதல்ை அவர் போருக்கு அஞ்சுகிறவர் என்று நினைக்கலாமா? கொக்கு நீர்க் கரையிலே மீன் வரும் வரைக்கும் கிற்குமாம்; சமயமறிந்து கொத்தும்; அது போல அரசன் இருக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்கிறபடி இன்ன சமயத்தில் இன்னது செய்ய வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அரசியல் தந்திரங் களில் அவர் வல்லவர். பல ஒற்றர்களே வைத்து அவர்களை வெவ்வேறு வேடம் புனேந்து போகச் செய்து பகைவர்களின் இரகசியங்களைப் பார்த்து வரும்படி செய் கிறவர். தாமே பல வகையான மாறுவேடம் புனைந்து தைரியத்துடன் சென்று காரியத்தை முடிக்கிருர். வெறும் குதிரை வீரராகவும், வஜ்ரபாகுவாகவும், கிழவனாகவும் வேடம் புனேந்து பகைவர்களைப் பிரித்து விடுகிருர்,