பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழ் நாவல்


அவர்கள் கண்களும் கண்களும் பேசுகின்றன. மோன மொழியிலே இதயம் பொங்கும் உணர்ச்சிகளே வெளியிடுகிருர்கள் பேசப் புகுந்தால் அதற்கு எல்லேயே இல்லேபோலத் தோன்றுகிறது. மாமல்லர் தம் காதலைப் புலப் படுத்திச் சிவகாமிக்கு ஒலேகள் எழுதுகிரு.ர். அவள் கருவிழிகளில் மின்னும் வேல்களின்மேல் ஆணையிட்டும் (ப. 85), அமுத நிலவைச் சொரிந்துகொண்டு வான வீதியில் பவனி வரும் சந்திரனேச் சாட்சியாக வைத்தும் (ப.418) உன்னே மறக்கமாட்டேன்!" என்று ஆணே யிடுகிருர், அவளேவிட அவருக்கு ராஜ்யம் பெரிதாக இருக்கவில்லே. ப ல் ல வ சாம்ராஜ்யத்துக்குத் தாம் சக்கரவர்த்தியாக முடி புனேந்துகொள்ளும்போது அவளே இரத்தின சிங்காசனத்தில் தம் அருகே வீற்றிருக்கச் செய்வதாக இயம்புகிருர் (ப. 419). வெள்ளத்தில் அகப்பட்டுத் தப்பி ஓர் ஒடத்தில் சிவகாமியுடன் ஏறிச் சென்றபோது அப்படி இருக்க நேர்ந்ததை கினேன்து இன்புற்றுகிருர்,

காதல் மாறுதல்

வ்வளவு ஆழ்ந்த அன்பு. சிறிது சிறிதாக மாறு வதற்குக் காரணங்கள் ஏற்படுகின்றன. சிவகாமி புலிகேசியின் படைகளுடன் வாதாபிக்குச் செல்லச் சம்மதித்தாள் என்ற செய்தியை ஒற்றர் கலேவன் வந்து சொன்னபோது, முதல் முதலாக அவருடைய உள்ளத்தில் கொண்டிருந்த பரிசுத்தமான அன்பில் ஒரு துளி நஞ்சு கலக்கிறது. அதை மீட்டும் எண்ணுவதற்கே சகிக்கிவில்லை (ப. 656), தந்தையின் விருப்பப்படி மாறுவேடம் பூண்டு பல இன்னல்களையும் தாண்டி வாதாபி சென்று சிவகாமி யைக் கண்டு தம்முடன் வரும்படி அழைக்கிருர். சளுக்க வேந்தனைப் பழிவாங்கச் சபதம் செய்திருந்த சிவகாமி,