பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

119

வர மறுத்தபோது அவருக்குக் கோபம் மூள்கிறது; குத்தலாகப் பேசுகிருர் (ப. 735). அவள் தன் சபதத்தைச் சொல்லி அவரை ஏறிட்டுப் பார்க்கும்போது, அந்தப் பார்வை அவரை கிலேகுலையச் செய்கிறது (ப, 736). அவருடைய தங்தையார், பாண்டிய குமாரியை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று வேண்டியபோது தாம் சிவகாமியிடம் கொண்ட காதல் அழியாதது என்கிருர். தந்தை பல கியாயங்களேச் சொல்லுகையில், தாம் அழைத்த போது அவள் வந்திருக்தால் இந்தத் தொல்லேகளுக்கு இடமில்லேயே என்று எண்ணி, வரமாட்டேன் என்று மறுத்த அவள் மேல் சொல்ல முடியாத கோபம் அவருக்கு வருகிறது (ப 751). கடைசியில் மகேந்திரருடைய கோரிக்கைக்கு இணங்குகிருர் (ப. 752).

அவர் பாண்டிய குமாளியைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிரு.ர். அவரால் சிவகாமியை மறக்க முடியவில்லை. அவளே மீட்டு வருவதை எண்ணி எண்ணிப் பல நாள் உறங்காமல் இருக்கிருர் (ப. 775). முன்பே அவள் என்ன சொன்னலும் கேளாமல் வலியக் கட்டித் தாக்கிக் கொண்டு வராமற் போளுேமே என்ற இரக்கம் உண்டாகிறது (ப. 776). -

அவர் மனைவி வானவன் மாதேவிக்கும் அவருடைய காதல் செய்தி தெரிந்திருக்கிறது. சிவகாமி அவர் அருகில் இருக்க நியாயமான உரிமை பெற்றவளென்றும், இதய சிம்மாதனத்தில் வீற்றிருப்பவளென்றும் அவள் மாமல்ல ரிடம் சொல்லும்போது, கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் அவை என்று தெரிந்து உவகைகொண்டு குரல் கழுதழுக்க அவளே உத்தமியென்று பாராட்டுகிருர் (ப. 791). தம்முடன் வர மறுத்தபோதே சிவகாமி இதயத்திலிருந்து விலகிவிட்டாள்