பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழ் நாவல்


வார்த்தைகள் அடங்கிய அழகிய நடையால் இவற்றை வெளியீடும் தன்மை ஆகியவற்றைக் கொண்ட இலக்கிய வடிவத்தைப் பெற்றிருக்கும் நாவலை இலக்கிய மென்று சொல்லத் தடை ஒன்றும் இல்லை’ என்று எழுதுகிறார்.[1]

பாத்திரங்களை உயிர்த் துடிப்பு உடையனவாகச் செய்து, வெவ்வேறு வகையான நடையும் பேச்சும் எண்ணமும் பெற வைத்து, கதையின் வளர்ச்சியிலே அவை இணைந்து இழையுமாறு ஆக்கி, நடையில் தெளிவும் அழகும் இனிமையும் குறிப்பும் பொருந்த அமைத்து, கதைப் பின்னலில் தொய்வு விழாதபடி இறுக்கமும் ஓட்டமும் நிலவச் செய்து படைக்கும் நாவல் மிகச் சிறந்த இலக்கியந்தான். கல்கியின் சமூக நாவலாகிய அலையோசை இந்தப் பண்புகளிற் பலவற்றைப் பெற்றிருக்கிறது. ஆதலின் நல்ல இலக்கியம் என்ற தகுதி அதற்கு உண்டு

வியப்பும் மதிப்பும்

வ்வொரு வாரமும் தொடர்கதையாகப் படித்த போது அல்வாவைச் சிறுசிறு உருண்டையாக உருட்டித் தந்தது போல மிகமிக நன்றாக இனித்தது. அடுத்த வாரக் கதையை ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கும்படி இருந்தது. புத்தக வடிவம் பெற்றபோது ஒரு தட்டு நிறைய அல்வாவைக் கொண்டு வைத்தால் தெவிட்டுவது போன்ற ஓர் உணர்ச்சி சிலருக்குத் தோன்றக்கூடும், சிவகாமியின் சபதம் இதைவிடப் பெரிய கதை; ஆனால் அதில் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளும் கட்டங்களும் சரித்திர பாத்திரங்கள் என்ற மதிப்பும் கதையின் நீளத்தை மறக்கச் செய்தன. அலையோசையைப்


  1. 1. A Treatise on the Noyel by Robert Liddel, p. 16.