பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

131


கோர பயங்கரத் தாண்டவமாடின. ஆயினும் இந்த நாசகாரச் சக்திகளையெல்லாம் மகாத்மாவின் ஆத்ம சக்தி முறியடித்து வெற்றிச் சங்கம் முழங்கியது. அந்த அற்புத வரலாற்றையும் இந்தக் கதைக்குப் பின்னணியாக அமைக்க முயன்றிருக்கிறேன்’ என்று எழுதுகிறார் கல்கி(ப. 11-12). காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்கள், சோஷலிஸ்டுக் கட்சியின் அரசியல் 1942 - ஆம் ஆண்டில் தேச பக்தர்கள் மறைவாகச் செய்த முயற்சிகள், சுதந்தர உதயம், காந்தியடிகள் அமரரான நிகழ்ச்சி ஆகியவற்றைக் கதையில் இணைத்திருக்கிறார்.

கதையிம் வரும் தாரிணியும் சூரியாவும் தேசத் தொண்டர்கள். தாரிணி பீஹார்ப் பூகம்ப நிவாரணத் தொண்டில் ஈடுபடுகிறாள். தன்னுடைய முதற் காதலுக்கு உரியவனாக நின்ற ராகவனையும் அத்தொண்டு செய்ய அழைக்கிறாள். அவன் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறான். ஆடம்பரத்தையும் உத்தியோகத்தையும், உதறி எறிந்துவிட்டுத் தேசத் தொண்டில் குதிக்கும் படி அழைக்கிறாள்.

இளைஞன் சூரியா இளம் பிராயமுதலே ‘உழைப்பவருக்கே உழைப்பின் பயன்’ என்ற எண்ணம் உடையவன். அவன் வளர வளர இந்த எண்ணமும் அவனிடம் வளர்கிறது. படிப்பைக்கூட நிறைவேற்றாமல் தேசத்தொண்டுக்குத் தன் வாழ்க்கையைச் சமர்ப்பணம் செய்ய முயல்கிறான். பணக்காரர்களைக் கண்டால் கோபம் கோபமாக வருகிறது. தாஜ்மகாலை ஓர் அரசன் தன்னுடைய அதிகாரத்தையும் அகங்காரத்தையும் கொண்டு பல ஏழைகளை வேலை வாங்கிக் கட்டிய பயனற்ற கட்டிடமாகப் பார்க்கிறான். இரகசியமாகப் புரட்சி செய்யும் தொண்டர் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறான். அந்தத் துறையில் தன்னோடு ஒத்து நிற்கும் தாரிணியிடம்