பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழ் நாவல்

சூரியாவின் நண்பனுமாகிய பட்டாபிராமனுக்குக் கொடுக்கலாம் என்று நிச்சயமாகிறது. இரண்டு கல்யாணமும் நடைபெறுகின்றன. இதுவரையில் வேடிக்கையும் விநோதமும் களிப்பும் காதலுமாகக் கதை படர்கிறது. இதற்குப் பின் தான் கதையில் சந்தேகமும் மன வேறுபாடும் துயர நிகழ்ச்சிகளும் வருகின்றன.

விஷ வித்து

தாரிணியிடம் ராகவன் காதல் கொண்டிருந்தான். அவள் இறந்துவிட்டதாக ஒரு கடிதம் அவனுக்கு வருகிறது. ஆனால் லலிதாவும் அவர்கள் குழந்தை வசந்தியும் அவன் தாய் காமாட்சியும் டெல்லியில் வந்து இறங்கியபோது ஸ்டேஷனுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வந்த ராகவன் வேறு ஒரு வண்டியில் தாரிணியைப் பார்க்கிறான். அவனுக்கு வியப்பாக இருக்கிறது. இறந்து போனவள் எப்படி உயிர் பெற்று வந்தாள் என்ற பரபரப்புடன், ஊரிலிருந்து வந்தவர்களைக் கவனிக்கக் கூடத் தோன்றாமல் அந்த வண்டிக்கருகில் ஓடுகிறான். வண்டி புறப்பட்டு விடுகிறது. தான் தாரிணி அல்ல என்று அந்தப் பெண் கூறுகிறாள். ஆனாலும் அவனுக்கு மனம் குழம்புகிறது.

இதைக் கண்ட சீதாவின் மனத்தில் விஷ வித்து மெல்ல விழுகிறது. மேலே, தாரிணியை ராகவன் சந்திக்க நேருகிறது. அவனுடைய பார்வையும் சொல்லும் அவன் உள்ளத்தில் தாரிணி குடிகொண்டிருப்பதைச் சீதாவுக்குக் காட்டிவிடுகின்றன. ராகவன் சீறி விழுகிறான். சீதா எது பேசினாலும் அதில் தவறு கண்டு பிடிக்கிறான்; மட்டம் தட்டுகிறான். அவளும் சலிக்கவில்லை. ஒன்றுக்கு ஒன்பதாகப் பேசுகிறாள். தாரிணியும் சூரியாவும் பழகுவது ராகவனுக்கு எரிச்சலை