பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ் நாவல்

சீதா போய்க்கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அவள்மேல் மோதுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்காக ராஜம்மாள் கடலில் இறங்குகிறாள். அவளுக்கு நீந்தத் தெரியுமாதலால் அலைகளே எதிர்த்துச் சமாளித்துக்கொண்டு நீந்திப்போகிறாள். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருக்கும் இடமே தெரியவில்லை. அலைகளின் பேரிரைச்சலுக்கு இடையில், “சீதா! சீதா!” என்று அலறுகிறாள். அவள் கைகள் சளைத்துப் போகின்றன. ஏதோ ஒரு கை தட்டுப்படுகிறது. அது சீதாவின் கைதான் (ப. 179).

இந்தக் காட்சியை நினைக்கும்போ தெல்லாம் ராஜம்மாள் நடுங்குகிறாள். ராஜம்பேட்டையில் சவுக்கு மரத் தோப்பில் தென்றல் புகுந்து, நெருங்கிய சவுக்கு மரக் கிளேகளின் வழியே நுழைந்து செல்லும்போது ஓசை எழுகிறது. அது கடலின் அலை ஓசை போல அவளுக்குக் கேட்கிறது; அஞ்சுகிறாள் (ப. 127).

அவள் அச்சம் உண்மையாகிறது அல்லவா? சீதா எத்தனை முறை துயரக் கடலில் முழுகி முழுகி எழுங் திருக்கிறாள்! இந்த அலையோசை சீதாவையும் பற்றிக் கொள்கிறது. ஒரே ஒரு தடவை அவளுக்கு அலையோசை இன்பமாக இருந்தது. ஶ்ரீநிவாசன் தன்னையே மணம் செய்து கொள்வதாகச் சொன்னபோது அவளிடம் பொங்கிய இன்பக் கடலினிடையே அலையோசையைக் கேட்கிறாள். ‘தூரத்தில் எங்கேயோ கடல் பொங்கி மலை போல் அலேகள் கிளம்பி மோதி விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது’ (ப. 151).

ஆனால் அதற்குப்பின் அவள் அலையோசை கேட்கும் போதெல்லாம் அவளுடைய துர்ப்பாக்கியத்தை, துயரக் கடலில் ஆழப்போவதை, வரப்போகும் பயங்கர