பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. கல்கியின் நாவல்கள்

143

நிகழ்ச்சியை, காட்டுவதாகவே அமைகிறது. ரஜனிபூர் ஏரியில் அலை அடிக்கும் ஓசை 'கும்' என்று கேட்கத் தொடங்கியிருந்தது (ப. 275). சீதா ஏரியில் விழுந்து விடுகிறாள், 'ஹோ' என்ற பேரோசை கேட்டுக்கொண்டிருக்கிறது வேறு ஓசையே கேட்கவில்லை. சட்டென்று அவளுக்கு நினைவு வருகிறது; அம்மா அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்த அலையோசையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி அஞ்சுகிறாள் (ப. 278).

ஹோஷங்காபாத்தில் அவள் தனியே இருக்கிறாள். ஊரெல்லாம் ஒரே கலகம். ராகவன் டெல்லி போயிருக்கிறான். அவள் குழந்தையோடு தனியாக இருக்கிறாள். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொள்கிறாள். வெகு தூரத்தில் ஏதோ ஓசை கேட்கிறது. அது நெருங்கி வருகிறது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருக்கிறது (ப. 694). இதற்கு அப்புறந்தான் அவள் அவ்வூரை விட்டு மெளல்வி சாயபுவின் உதவியால் ஓடும்படி நேர்கிறது.

போகும்போது நடுவழியில் வண்டிக்காரப் பையன் வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விடுகிறான். மெளல்வி சாகிபு-அவரே அவள் தகப்பனாராகிய துரைசாமி ஐயரென்று பின்பு தெரிகிறது; அந்தச் சாகிபு துப்பாக்கியை எடுத்து வண்டியை நோக்கிச் சுடுகிறார். அப்போது சீதாவின் காதில் இலேசாக அலை ஓசை கேட்கிறது. அது, “மரணமே வா! மரணமே வா!” என்று அவள் காதில் ஒலிக்கிறது (ப. 717). இந்த ஓசையும் ‘மரணமே வா’ என்ற அழைப்பும் அடிக்கடி கேட்கின்றன (ப. 718-9). அவர்கள் ரெயிலில் ஏறிப் போகும்போது ரெயில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் அலை ஓசையைப்போல் கேட்கிறது; அதனுடன் ‘மரணமே வா’ என்று அவள் உள்ளம் கூவுகிறது (ப. 720). செனாப் நதியில் அவள் மூழ்கும் போது உண்மையான அலேயோசை இருக்கிறது; ஆனால்