பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கியின் நாவல்கள்

145


பார்க்கிறோம். கதையின் ஆரம்பத்தில் ராஜம்பேட்டைத் தபாலாபீஸும் அதில் உள்ள தபால்காரரும் நமக்கு அறிமுகம் ஆகிறார். தபால் ரன்னர் தங்கவேலுவின் கையிலுள்ள ஈட்டிச் சிலம்பு ‘ஜிங்ஜிங் ஜிகஜிங்’ என்று செய்யும் ஒலி கேட்கிறது. லலிதா தபாலாபீஸுக்கு ஓடுகிறாள்; வருகிற கடிதத்தை வாங்கிக்கொள்ள அவ்வளவு வேகம், அவள் ஓடிப்போனதற்காக அவள் தாய் குறை கூறுகிறாள். “கலியாணம் பண்ணும். வயதான பெண்ணை யாராவது தனியாக அனுப்புவார்களா?” என்று கேட்கிறார். “அனுப்பினால் என்ன, பூகம்பமா வந்து விடும்?” என்று கிட்டாவையர் சொல்கிறார் (ப. 22).

இதோ கதையின் கடைசி அத்தியாயத்துக்கு வந்து விட்டோம். இங்கேயும் ரன்னரின் ஈட்டி ஒலி கேட்கிறது. ஆனால் அவன் நடையில் பழைய மிடுக்கு இல்லை; கேட்கும் ஒலியில் சில சொற்கள் இல்லை; சதங்கையில் சில உதிர்ந்து விட்டனவோ! ‘ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்து வந்தான். ஜிங், ஜிங் என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது’ என்று இந்த வேறு பாட்டைக் குறிக்கிறார் ஆசிரியர் (ப. 789). முன்பு லலிதா தபாலாபீஸுக்கே ஓடினாள். இப்போது வாசலுக்கு ஓடுகிறாள். ஓடும் தூரம் குறைந்திருக்கிறது. “வாசலில் தபால் என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள், ஒரு கணம், ‘ஒரு வேளை தபால்கா, பாலகிருஷ்ணனாயிருக்குமோ’ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலே அந்தப் பழைய பாலகிருஷ்ணன் தான்” (ப, 791).

முதலில் பேச்சினிடையே வந்த பூகம்பங்கூட இங்கே வருகிறது. “தொழில்கள் செய்து பிழைக்க இப்போதி விருந்தே எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று