பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழ் நாவல்

தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்கள் வருகின்றன. இப்படிப் பரிசுக்காகவும் பத்திரிகையில் தொடர்கதை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்காகவும் நாவல்களைப் படைக்கிறவர்களையே இன்று எங்கும் பார்க்கிறோம். வேறு எந்த விதமான தூண்டுகோலும் இல்லாமல் தம்முடைய மனவெழுச்சி காரணமாகத் தம்முடைய படைப்புத் திறமையைக் காட்டி நாவல் எழுதுகிறவர்கள் மிக மிகக் குறை வாகப் போய் விட்டார்கள்.

நாவல்களின் மதிப்பு

ப்படியோ ஓர் ஆண்டில் குறைந்தது இருபது நாவல்களாவது வெளியாகின்றன. எல்லாம் தரமான நாவல்களென்று சொல்ல முடியாது. நல்ல நாவல்கள் சில வெளியாகியிருக்கின்றன. பத்திரிகைகள் நடத்தும் போட்டியில் பரிசு பெற்ற நாவல்களில் தரமான இலக்கிய மதிப்பையுடைய நாவல்களும் இருக்கின்றன. அவற்றின் தகுதியை இப்போது எடை போடுவதில் பல சங்கடங்கள் உள்ளன. பல ஆண்டுகள் சென்ற பிறகே அவற்றின் மதிப்பை உள்ளபடியே தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படும். இப்போது உருவாகும் நாவல்களைப் பல காரணங்களைக் கொண்டு உயர்வாகவே எண்ணும் இயல்பு சிலருக்கு இருக்கலாம். எழுதும் ஆசிரியர்களிடம் உள்ள அபிமானமும் புதுமையும் போன்ற காரணங்கள் அத்தகைய எண்ணத்தை உண்டாக்லாம். வேறு சிலர் தம் கண்முன் எழும் நாவல்கள் அத்தனையும் இலக்கிய மதிப்பைப் பெறுவன அல்ல என்று கூறும் இயல்புடையவர்களாகவும் இருக்கிறார்கள். 'புறக்கடைப் பச்சிலைக்கு வீரியம் மட்டு' என்ற பழமொழியின் கருத்தை அவர்கள் இயல்பு மெய்ப்பிக்கிறது. இந்தக் காலக் கூறுபாட்டில் தோன்றும் நாவல்களையெல்லாம் இனி