பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கி. வா. ஜகந்நாதன்

சங்க நூல்களைத் தமிழுலகத்திற்கு மீட்டுத் தந்த அமரர் டாக்டர் மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்களின் மாணாக்கராகிய திரு கி. வா. ஜ. இன்றும் தம்மை மாணாக்கர் எனவே சொல்லிக் கொள்கிறார். அவருக்கு ஆதினத் தலைவர் களும், சங்கங்களும் பல பட்டங்களை வழங்கியிருந்தும் ஐயரவர் களின் மாணாக்கர் என்பதையே சிறந்த பட்டமாக அவர் கருதுகிறார். பழமைக்கும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாக உள்ள அவர் தொல்காப்பியம், சங்க நூல்கள் முதல் நாடோடிப் பாடல்கள் வரையில் உள்ள பழைய புதிய இலக்கிய இலக்கணங்களை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். வளரும் தமிழுக்கு ஆக்கம் தேடிப் புதிய எழுத்தாளர்களை ஊக்கி வரும் கலைமகள்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்து புதிய இலக்கியப் படைப்புக்குத் துணையாக கின்று தொண்டாற்றி வருகிறர் இதுவரையில் 150 நூல்கள் எழுதியுள்ளார். சிறு கதைகள், கவிதை, ஆராய்ச்சி, கட்டுரைகள் என்ற துறைகளில் அவருடைய புடைப்புக்கள் உள்ளன. அண்மையில் அறுபதாண்டு நிறைந்தும் இளமையுள்ளமும் தெய்வ பக்தியும் நிரம்ப வாழும் அவர் இன்னும் படைப்பாற்றலுடன் விளங்குகிறர்.

Wrapper Printed at Lakshmi Company, Madras-600 026.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※

l