பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

21

வரவேற்பே, இந்த இரண்டாவது நாவலை எழுத எனக்கு ஊக்கம் அளித்தது. இந்த நாவல் அதைப்போல நீண்டதாக இல்லாவிட்டாலும், இதில் பல வேறு காட்சிகளும் சம்பவங் களும் இடம் பெற்றிருக்கின்றன. இவை மூலம் மனித இயல்பின் பல்வேறு கோணங்களையும், பல்வேறு. தர்ம நீதிக் கொள்கைகளையும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சுகாதாரத்தையும், இளவயதில் திருமணம் செய்வது போன்ற சமூகப் பழக்கங்களினால் விளையும் தீமைகளையும் எடுத்துக்காட்டி யுள்ளேன். இந்து இளைஞர்களுக்குத் தர்ம நீதி போதனை செய்யவேண்டும். என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் இந்நாளில், இந்த நவீனமும் இதனுடன் இணைக்கப்பட்ட அநுபந்தங்களும் பயன்படும் என்று நம்புகிறேன்.'[1]

கதை சிறியதாகப் போய்விட்டபடியால் பிரதாப முதலியார் சரித்திரத்தில் உள்ள விரிவான கதை அமைப்பும் அதிகமான பாத்திரங்களும் சுகுணசுந்தரியில் இல்லை. பிரதாப முதலியார் சரித்திரத்தில் கதாநாயகனுக்கு விரோதி யென்று கதையில் குறிப்பிட்ட ஒருவனைச் சொல்வதற்கில்லை. அதாவது 'வில்லன்' இல்லை. ஆனால், சுகுணசுந்தரியில் கதாநாயகன் புவனேந்திரன் என்பவன். அவனிடம் சுகுண சுந்தரிக்குக் காதல் உண்டாகிறது. புவனேந்திரனுக்கு எதிராக மதுரேசன் என்பவன் வருகிறான். அவன்தான் நாவலில் வரும் 'வில்லன்', முன் நாவலைவிட இதில் இந்த ஒன்று சிறப்பானது என்று சொல்லலாம்.

பிற பழைய நாவல்கள்

1893-ஆம் ஆண்டில் பிரேம கலாவத்யம் என்ற நாவல் வெளியாயிற்று. அதனை எழுதியவர் ஸு. ஸு. வை.


  1. சுகுண சுந்தரி, 4. 5.