பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

25


அவர் 1924-ஆம் ஆண்டில் பஞ்சாமிர்தம் என்ற மாதப் பத்திரிகையைத் தொடங்கினார். அதில் பத்மாவதி சரித்திரத்திற்கு மூன்றாம் பாகத்தைப் படைத்து எழுதி வந்தார். அடுத்த ஆண்டிலே அவர் காலமாகி விட்டமையால் அந்த மூன்றாம் பாகம் அரை குறையாகவே நின்று விட்டது. இரண்டு பாகங்களும் வந்து இருபத்து நாலு ஆண்டுகளுக்குப் பின்பு இந்த நாவலை நீட்டுவோமா என்ற எண்ணத்தோடு எழுதத் தொடங்கியது மூன்றாம் பாகம். அவர் தம்முடைய இளமைக் காலத்தில் நன்கு சிந்தித்துத் திட்டம் செய்து வரைந்தவை முதலிரண்டு பாகங்கள். அந்த இரண்டு பாகங்களிலும் கதையை நிறைவேற்றி விட்டார். அந்தக் காலத்தில் அவரே இதற்கு மூன்றாம் பாகம் ஒன்றைத் தொடங்குவோம் என்று எண்ணியிருக்கமாட்டார். எவ்வாறாயினும் பத்மாவதி சரித்திரம் முதலில் தோன்றிய உருவத்தில் இரண்டு பாகங்களில் ஒரு முழுமையுடன் விளங்குகிறது என்பதை அதைப் படித்தவர்கள் -உணரக்கூடும்.

மாதவய்யா ஆங்கிலம் படித்தவர்; தமிழிலும் புலமை யுடையவர். தமிழில் செய்யுள் வனையும் ஆற்றலும் உடை யவர். அவர் பத்மாவதி சரித்திரத்தோடு, விஜய மார்த்தாண்டம், முத்து மீனாட்சி என்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார்.[1] ஆனால் பத்மாவதி சரித்திரமே மற்ற இரண்டையும் விடச் சிறந்ததாக நிலவுகிறது.

அவர் ஆங்கில நாவல்கள் இலக்கியங்களாக எண்ணி . மக்களால் மதிக்கப்பெறுவதையும், ஆயிரக்கணக்கான மக்கள்

அவற்றை வாங்கி அநுபவிப்பதையும் அறிந்தவர். 'ஆங்கில பாஷையில் நாவல்கள் வசன நடையிலேயே எழுதப்படுகின்றன; சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களாக


  1. மா. கிருஷ்ணன்: பத்மாவதி சரித்திரம், ஆசிரியர் சரிதை, ப.7.