பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

31

மோகம் உண்டாயிற்று, வடுவூராருடைய நாவல்கள் வந்த பிறகு ஆரணி குப்புசாமி முதலியாருடைய மொழிபெயர்ப்பு களுக்கு இருந்த 'கிராக்கி' குறைந்தது. மொழிபெயர்ப்பைக் காட்டிலும் தழுவலுக்கு அதிகச் செலாவணி ஏற்பட்டது. படிக்கத் தெரிந்த இளைஞர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் ஈடுபடாதவர்கள் மிகவும் அருமை. அவர் மனோரஞ்சனி என்று ஒரு சஞ்சிகையைத் தொடங்கி அதில் பகுதி பகுதியாக நாவல்களை வெளியிட்டு வந்தார்... நாவல் மாத இதழாக அது வெளியாயிற்று.

அவரை அடியொற்றிக் கோதைநாயகியம்மாள் நாவல்கள் வெளிவந்தன. அவர் முதல் முதலில் எழுதிய வைதேகி என்ற நாவல் ஓரளவு வடுவூரார் நாவலோடு சமானமாக நின்றது. நாளடைவில் அவருடைய நாவல்களில் அத்தனை விறுவிறுப்பு இல்லாமல் சீர்திருத்தப் பிரசாரமும், நீதிப் பிரசாரமும் அதிகமாகிவிட்டன.

கொள்ளை, கொலை, துப்பறிதல் என்ற நிகழ்ச்சிகளை வைத்துப் படைக்கப் பெற்ற நாவல்களுக்கு வியாபாரம் அதிகமாகவே, துப்பறியும் நாவல்கள் புதியனவாக எழுந்தன. இந்தத் துறையில் ஜே. ஆர். ரங்கராஜு எழுதியவை அந்தக் காலத்தில் எல்லா நாவல்களையும் விட மிகுதியாகப் பரவின. அவருடைய இராஜாம்பாள் எத்தனையோ பதிப்புக்கள் செல்வாயின. சந்திரகாந்தாவும் அதற்கு அடுத்தபடி பரவியது. வேறு சில நாவல்களையும் அவர் எழுதினார். எல்லாம் துப்பறியும் நாவல்கள். மேல் நாட்டுக் கதைகளில் வரும் ஷெர்லக் ஹோம்ஸ் என்னும் துப்பறியும் பாத்திரத்தைப் போல ஒரு பாரத்திரத்தைப் படைக்க வேண்டும் என்பது ரங்கராஜுவின் கருத்து. துப்பறியும், கோவிந்தனை அவர் ஒவ்வொரு நாவலிலும் கொண்டுவந்தார். அந்தக் காலத்தில் அவருடைய நாவல்களைப் படித்தவர்கள் துப்பறி