பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ் நாவல்

கியத் தரத்திலே வைத்து மதிக்கத்தக்கவையாக இருத்தலைக் கண்டோம்.

முன்பெல்லாம் நாவல்கள் என்று நடமாடிய மூன்றாந்தர மர்மக் கதைகளும், கண்டதும் காதல் கொண்டதும் கோலமென்று காட்டும் கிளுகிளுப்புக் கதைகளும் மட்ட ரகமானவை என்பதை இப்போது தமிழ் மக்கள் அறியலானார்கள், ஹிந்தி மொழி நூல்களிலும், வங்க மொழி நூல்களிலும் மகிழ்ந்து போனார்கள். அவற்றோடு மராத்திய நாவல்களின் மொழி பெயர்ப்புகளும் சேர்ந்து கொண்டன.

இந்த மொழி பெயர்ப்புத் துறையில் சிலரே புகுந்து உழைத்தனர். மூல நூல்களின் மொழியில் நல்ல அறிவும் தமிழில் தடங்கலின்றி அழகாக எழுதும் வன்மையும் இருந்தாலன்றி மொழி பெயர்ப்பில் வெற்றி பெறுவதென்பது எளிய செயலன்று. இரு மொழிப் புலமையும் உடையவர்கள் மிகுதியாக இருப்பது சாத்தியம் அன்று. ஹிந்தியிலிருந்தும் மராத்தியிலிருந்தும் நாவல்களை நல்ல தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர்களில் தலையாக நிற்பவர். என்னுடைய உழுவலன்பர் திரு கா. ஸ்ரீ. ஸ்ரீ. ஆவார். ஹிந்தி மொழிபெயர்ப்பில் முன்னோடியாக இருந்தவர் இவர். மராத்தி, மொழி பெயர்ப்பில் தனியொருவராக நிற்கும் பெருமை இவருக்கு உண்டு. வங்க மொழி நாவல்களை நேராகச் சிலர் மொழி பெயர்த்தார்கள். ஹிந்தியிலிருந்து பலர் மொழிபெயர்த்துத் தந்தார்கள், இந்தத் துறையில் வங்க மொழியிலிருந்து நேராக மொழிபெயர்த்துத் தந்தவர்களில், தமிழ் நாட்டில் மதிப்புக்குரியவர்களாக விளங்குகின்றவர்கள் என் அன்பர்களாகிய திரு. த. நா. குமாரசாமி அவர்களும், திரு த. நா. சேனாபதியவர்களும். இவ்விருவரும் சகோதரர்கள் என்பது பலருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன்.