பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

49

பிரதாப முதலியார் சரித்திரம்


பிரதாப முதலியார் சரித்திரத்தில் கதாநாயகன் பிரதாப முதலியார், கதாநாயகி ஞானாம்பாள். ரொமான்ஸ் என்னும் வகையில் அடக்க வேண்டிய நெடுங்கதை இது. இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளைப்போல் அல்லாமல் அசாதாரணமான நிகழ்ச்சிகள் பல இந்நாவலில் வருகின்றன. ரொமான்ஸ் என்னும் அற்புதக் கதைகளின் இயல்பை ஆர்நால்ட் கெட்டில் என்பவர் கூறுவது இங்கே அறிவதற் குரியது: 'ரொமான்ஸ் என்பது இயல்புக்கு வேறானது; செல்வர்களின் வாழ்க்கையைச் சொல்வது; பாளையப்பட்டுக்காரர்களின் ஆட்சிக் காலத்து இலக்கியும்; நாம் வாழும் உலகத்தில் எப்படி வாழ வேண்டுமென்பதை வகுத்துக் காட்டாமல் மக்களை நம்மினும் வேறான உலகத்துக்கு, எட்ட முடியாத வாழ்க்கைக்கு, அழைத்துச் செல்வது. நீதியைச் சொல்லும் பகுதி அதில் தலையானது' என்று கூறுகிறார்.[1]இத்தகைய கதைகளில் அதிசயமான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வரும்.

கதைச் சுருக்கம்

பிரதாப முதலியார் சரித்திரக் கதை சிக்கல்கள் பல அமைந்த பெரிய கதை அன்று. பிரதாப முதலியாருக்கும் ஞானாம்பாளுக்கும் இளமையிலேயே அன்பு உண்டாகிறது. அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களுக்குக் கல்யாணம் ஆகும் பருவம் வருகிறது. ஞானாம்பாளின் தந்தையார், திருமணமான பிறகு பெண்ணும் மாப்பிள்ளையும் தம் வீட்டிலேயே இருக்கவேண்டும். என்று சொல்கிறார். பிரதாப முதலியாரின் தந்தையார் ஒப்புக் கொள்ளாமையால்


  1. Arnold Kettle An Introduction to the Novel, Vol. I, p.31.