பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் நாவல்

சாலேயில் சேர்க்கவே, நோயின் கடுமையால் அவள் இறந்து போனதாக மருத்துவர்கள் சொல்லி விடுகிருர்கள். யாவரும் துயரத்துடன் ஊர் போய்ச் சேருகிருர்கள். ஆதியூரியிருந்து தேவராஜ பிள்ளையும் கனகசபையும் இந்தச் செய்தியை அறிந்து மருத்துவசாலை உள்ள ஊருக்குப் போய் விசாரிக்க, ஞானம்பாள் உயிரோடு இருப்பது தெரிந்தது. மூர்ச்சை போட்டிருந்ததனால் இறந்து போனதாக எண்ணி விட்டோம் என்று மருத்துவர்கள் சொல்ல, அவளை அழைத்துக்கொண்டு சத்தியபுரி சென்று எல்லோருக்கும் எதிர்பாராத இன்பத்தை அளிக்கிறார்கள். மாண்டவள் மீண்டாள் என்று யாவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்கிருர்கள்.

இதுதான் கதையின் சாரம். ஆனால் இந்த மூலக் கதையோடு பிரதாப முதலியார் சரித்திரம் நிற்கவில்லை. இடையிடையே பலருடைய கதைகள் கிளைகளாக வருகின்றன. ஞானம்பாள் முதலில் சிறைப்பட்டபொழுது தப்பிச் சென்று ஒர் ஆண்டிச்சியம்மாளின் துணையைப் பெறுகிறாள். அந்த அம்மாளுடைய கதை இடையே வருகிறது.[1] கனகசபை திருமணம் செய்து கொள்கிற பெண்ணின் கதை ஒன்றும் இடையில் வருகிறது.[2] இவற்றிற்கும் மூலக் கதைக்கும் இன்றியமையாத இணைப்பு ஏதும் இல்லை.

நீதி உபதேசம்

கதாபாத்திரங்களாக வருகிறவர்களிற் பலர் நீதி உபதேசங்களைச் செய்கிறார்கள். அவற்றிற்கு உதாரணங்களாகப் பல நீதிக் கதைகளையும் சொல்கிறார்கள். துண்டு துணுக்குகளாக உள்ள நகைச்சுவைப் பேச்சுக்களும்


  1. அத்தியாயம்., 16.
  2. அத்தியாயம், 38.