பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ் நாவல்

56 தமிழ் காவல்

உள்ள கொடுரங்களையும் நான் விவரிக்க முயன்றிருக்கும் முறையில், வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன் வருவார்கள்' என்று எழுதுகிறார்.இயற்கையோடு ஒட்டிய முறையிலேதான் இந்த நாவலேத் தாம் எழுதி யிருப்பதாக இவர் நம்புகிறார், பல்வேறு பாத்திரங்களையும் சம்பவங்களையும் விவரிப்பதில் நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன். அற்புதங்களையோ அபிமான உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதையோ தவிர்த்திருக்கிறேன். எந்த மதத்தினர் சமயப் பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்' என்று அவர் எழுதுவதில்இந்த நம்பிக்கை புலனாகிறது.

ஆம், அவர் இயற்கையை ஒட்டியே தான் எழுதியிருக் கிறார். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட, இயற்கையை மீறின அற்புதங்களை எழுதவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர் காட்டும் பாத்திரங்கள் நம்முடன் வாழும் உலகத்து மக்களாகத் தோன்றவில்லை. நம்மினும் வேறாக, அறிவுச் சிறப்பும் தீரமும் உடையவர்களாக விளங்குகிறார்கள்.

நீதிகளை அவர் எப்படிப் புகுத்துகிறார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறேன். முதல் அத்தியா யத்தில் பிரதாப முதலியார் பிறப்பு வளர்ப்பு முதலிய செய்திகள் வருகின்றன. அவர் கல்வியில் ஊக்கமுடைய வராக இருக்கவில்லை. பணக்காரர்களுக்குக் கல்வி எதற்கு என்று கேட்கிறார். அப்போது அவருடைய தாயாகிய சுந்தரத்தண்ணி அவரிடம் வந்து, "என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவும் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப்பார்' என்று தொடங்கி, 'ஆதலால், கல்வி, தனவான்களுக்கே முக்கியம்" என்று அறிவுறுத்துகிறாள். இதைச் சொல்லும்போது, என்று என் தாயார்