பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் நாவல்

நாவலில் இத்தகைய கதைகள் வருவது கூடாது 1.என்றே மேல் நாட்டு ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 'நாவலுக்குள் காணும் பலவகைக் கதைகள், செரிவற்ற கதைப் பின்னலில் இணைக்கப் பெற்றனவாக இருந்தாலும், ஜீவனுள்ள ஒருமைப்பாட்டைப் பெறுவதில்லை' என்று ஆர்நால்டு கென்னட் சொல்கிறார்.[1] ஆந்தொனி ட்ரோலோப் என்ற நாவலாசிரியரும், இத்தகைய உப கதைகள் படிப்பவர்களின் கவனத்தைப் புறத்தே இழுத்துச் சுவையைக் குறைக்கின்றன என்று கருதுகிறார்; 'நாவலில் உபகதையே இருத்தலாகாது. ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சொல்லும் கதையைச் சொல்லும் உத்திக்கு உதவியாக இருக்க வேண்டும்’[2] என்று எழுதுகிறார்.

நிகழ்ச்சிகள் இணைதல்

தையின் போக்குக்கு இன்றியமையாத நிகழ்ச்சிகளை இணைத்து. அந்நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அமையும் படி செய்வது நாவலாசிரியனது கடமை. இந்த நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை என்ற உணர்வு உண்டாகும்படி அவற்றை அமைக்க வேண்டும். இதை எடுத்து விட்டாலும் கதையின் போக்குக்கோ பாத்திரங்களின் குணசித்திரத்துக்கோ ஊறுபாடு ஏதும் இல்லை என்று எண்ணும் வகையில் ஏதேனும் நிகழ்ச்சியிருந்தால் அது நாவலின் செறிவைக் கெடுத்துவிடும். இசைக் கருவிகளில் நரம்புக் கட்டானது தக்கபடி அமைந்திருந்தால் இசை நன்றாக எழும். அது தளர்ந்து போனால் அந்த அந்த நரம்புக்கு ஏற்ற ஒலி எழும்பாது. இப்படி


  1. Arnold Kennet: An Introduction to the. English Novel, p. 184.
  2. Anthony Trollope: Quoted by Miriam Allott in Novelists on the Novel, p. 233.