பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

65

ஆளும் உத்திகள் பலவாக இருக்க இருக்க, அவற்றால் விளையும் இன்பமும் மிகும். நாவல்களில் வெவ்வேறு பாத்திரங்களின் இயக்கத்தைச் சொன்னாலும் ஈகழ்ச்சிகள் ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்புத் தட்டிவிடும். "ஒரு குருவி களஞ்சியத்தில் புகுந்து ஒரு நெல்லைக் கொண்டு போயிற்று; பின்னும் ஒரு குருவி அதில் புகுந்து மற்றும் ஒரு நெல்லைக் கொண்டு போயிற்று" என்று மீட்டும் மீட்டும் ஒருவன் சொல்லிக் கதையை வளர்த்ததாக ஒரு கதை கேட்டிருக்கிறோம். முதல் குருவியும் இரண்டாவது குருவியும் அப்பால் வந்த குருவிகளும் வேறு வேறுதான். அவை கொத்திச் சென்ற செல்லும் வேறு வேறுதான். ஆனாலும் கொத்திச் செல்லும் நிகழ்ச்சி ஒன்று தானே? திருப்பித் திருட்பி அந்த கேழ்ச்சியைச் சொன்னால் அலுப்பும் கோபமும் தட்டுவதில் வியப்பு ஏதும் இல்லை.

பிரதாப முதவியார் சரித்திரத்தில் பிள்ளையைத் திருடும் நிகழ்ச்சி மூன்று இடங்களில் வருகிறது;[1] மூன்றும் வேறு வேறு குழந்தைகள் என்று சமாதானம் சொல்லலாமா? தீர்மானமான மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் திருமணமாகாமல், வேறு யாருக்கோ மணமாகும் அதிசய நிகழ்ச்சி இரண்டிடங்களில் வருகிறது.[2] பெண்ணை வழி மறித்துச் சிறையெடுக்கும் செயலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தி நிகழ்கிறது.[3]


பொருத்தமற்ற நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள் நம்பும் வகையில் அமைவது மிகவும் இன்றியமையாதது. கதை கேட்பவர்களும் அறிவுடையவர்களாதலின் பொருத்தம் இல்லாத செய்திகளைச் சொன்னால் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். நாவல்களில், நம்ப முடியாத, ஏற்கத் தகாத நிகழ்ச்சிகளுக்கு இடமே இல்லை.


  1. ப. 23, 72, 79.
  2. ப. 58, 152.
  3. 3. ப. 17, 63.

5