பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ் நாவல்



கருணாந்தம் பிள்ளை இறக்கும் தருவாயில் மரண சாசனம் எழுதித் தம் மகளுக்குச் சொத்தை வழங்குகிறார். ஆனால் அவர் பிழைத்துக் கொள்கிறார். அந்த மரண சாசனத்தினல் அவர் கைக்குச் சொத்து வராமல் திண்டாடுகிறாராம். [1] அவர் உயிர் பிழைத்தவுடனே மரண சாசனத்தை மாற்றிவிட உரிமை உண்டே. அப்படியிருக்க, அதை மாற்றாமல் அல்லற் பட்டாரென்று சொல்வது ஏற்கத்தகாத நிகழ்ச்சி. சட்டம் தெரிந்த ஒருவரே இதை எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது !

ஞானம்பாளுக்கு வேறு ஒரு பிள்ளையையும் பிரதாப் முதலியாருக்கு மற்றொரு பெண்ணையும் நிச்சயித்துக் கல்யாணம் நடைபெற ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களைப் பெற்றவர்கள், அவர்களின் உறவினர் ஒருவர் இறந்தமையால் கல்யாணத்தை நிறுத்த வேண்டி நேர்கிறது. திருநெல்வேலியிலுள்ள சம்பந்திக்கும், கோயம்புத்தூரிலுள்ள சம்பம்திக்கும் தனித்தனியே வெவ்வேறு பேர்வழிகள் கடிதம் எழுதுகிறார்கள் அவர்களுக்குக் கடிதம் போய்ச்சேராமையால் இரண்டு சாராரும் வந்து தங்களுக்குள் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்.[2] இரண்டு கடிதங்களும் போய்ச் சேரவில்லையென்று சொல்வது நம்பத்தக்கதாக இல்லை. அன்றிச் சம்பந்திகள் இன்னரென்று தெரிந்து கொள்ளாமல், மணப் பெண் மணமகன் ஆகியவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் திருமணம் செய்ய இரண்டு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டார்கள் என்பதும் அறிவுக்கு பொருத்தமாக இல்லை.

குணரத்தினம் என்ற பெண்ணை ஒரு திருடன் கைக்கு ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு ஓடுகையில், பின்னே குழந்தைக்கு உரியவர்கள் துரத்திக்கொண்டு வர, அவன்


  1. 1. ப. 42-43
  2. 2. அத்தியாயம். 13