பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. மூன்று நாவல்கள்

67

ஐயனார் கோயிலுக்குள் நுழைந்து, குழந்தையை விக்கிரகத்தின் முன் வைத்து அதன் பின்னே மறைந்து நிற்கிறான். துரத்திக்கொண்டு வந்தவர்கள் அங்கே வந்து பார்த்தபோது திருடன் குரலே மாற்றிக்கொண்டு ஐயனார் சொல்வது போல, “இந்தப் பிள்ளைமேல் நமக்குக் கிருபை உண்டாகி வரப்பிரசாதங்களுடன் அனுப்ப எண்ணியிருக்கிறோம், நீங்கள் தூய்மையின்றி இங்கே புகுந்திருக்கிறீர்கள். உங்கள் குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்வோம், சும்மா விட்டுப் போனால் அநுக்கிரகம் புரிவோம்” என்று சொன்னனும். வந்தவர்கள் ஐயனார் அருள் புரியட்டும் என்று போய்விட்டார்களாம்.[1] இதைச் சிறு குழந்தைகூட நம்பாது.

ஞானம்பாள் ஆண் வேடம் புனைந்து பல நாட்கள் அரசு புரிந்ததாகக் கதை வருகிறது.[2] அவள் பெண் என்பது தெரியாமல் அத்தனை காலம் இருந்திருக்க முடியுமா என்பது நேர்மையான ஐயந்தானே?

இதுகாறும் சொன்ன குறைகள் யாவும் இந்த நாவலில் இருக்கின்றன என்பதில் வியப்பு ஏதும் இல்லை. இதுதான் முதல் முதலில் எழுந்த காவல் என்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும். எப்படியேனும் புதுவது புனைந்த கதையைச் சொல்ல வேண்டும், இடையிடையே நகைச்சுவையும், விநோதமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்தகைய பகுதிகளே ஆசிரியர் அமைத்திருக்கிறார்.

அக்காலத்தில் வடசொற்களை மிகுதியாகப் பெய்து எழுதும் நடை வழங்கியது. அதைத் தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்தார்கள். அந்த கடையில் தங்கு தடையின்றி இதை அவர் எழுதியிருக்கிறார்.


  1. 1. பக்.79-90.
  2. அத்தியாயம், 36-44