பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

69

போல ஒரு செய்தி வருகிறது. என் தாயாருடைய கீர்த்திப் பிரதாபமும் ஞானம்பாளுடைய கியாதியும் ஐரோப்பா வரைக்கும் எட்டி, சக்கரவர்த்தியவர்கள் கிருபை கூர்ந்து அவர்கள் இருவருக்கும் ராஜ ஸ்திரீகள் என்கிற பட்டமும் கொடுத்து அநேக ஜாகீர்களும் விட்டார்கள்' என்று பிரதாப முதலியார் சொல்விப் பெருமிதம் அடைகிறார். பிரதாப முதலியாரா? இல்லை, இல்லை; அவருக்குட் புகுந்துகொண்டு வேதநாயகம் பிள்ளேயே பேசுகிறார். எம்முடைய பெண்மணிகள் சிறப்பை அடையவேண்டும் என்று அவருக்கு எத்தனை ஆசை!பெண்மதி மாலை இயற்றியவர் அல்லவா அவர்?

கமலாம்பாள் சரித்திரம்

த்தியபுரி, விக்கிரமபுரி முதலிய ஊர்களே மறந்து விட்டு இப்போது கேரே மதுரை ஜில்லாவில் உள்ள சிறுகுளத்துக்கு வருவோம். நாம் இதுவரையில் பிரதாப முதலியார் சரித்திரத்தில் கண்ட ஊர்கள் இந்த உலகத்தில் இல்லாதவை. அவற்றின் பெயர்கள் மட்டும் நமக்குத் தெரியுமே ஒழிய அவற்றின் அடையாளம் தெரியாது; அவற்றிலுள்ள விதிகளோ, காட்சிகளோ நமக்குத் தேவை இல்லை என்று ஆசிரியர் சொல்லவில்லை. ஆனல் இப்போது நாம், தோப்பும் துரவும் ஆறும் மணலும் வீதியும் கோயிலும் உள்ள ஊர்களைப் பார்க்கப் போகிறோம். நாம் எங்கெங்கோ பார்த்த மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அவர்களில் ஒவ்வொருவரையும் இனம் கண்டுகொள்ளும்படி அவர்களுடைய தோற்றமும், பேச்சும், எண்ணங்களும், உணர்ச்சிகளும் இருக்கின்றன.


'மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தில் ஈடுத்தெருவின் மத்தியில்