பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

79

கதையின் இறுதிப் பகுதியும் இத்தகைய அநுபவங்களை விரிவாகச் சொல்கின்றன. ஆன்மிகத் துறையிலே சென்று சாதனம் செய்து சில படிகளைக் கடந்தவர்களே அந்த அநுபவங்களை எழுத முடியும்.

‘இவருடைய பிராந்தியோ அல்லது குரு தரிசன விசேஷமோ அறியேன்—திடீரென்று பூமி முதல் ஆகாய மட்டும் நிலவினும் இனிதாய், வெயிலினும் காந்தியாய்; தென்றலே உருவுகொண்டு வந்தாற்போல ஜில், ஜில், ஜில் என்று குளிர்ந்து மந்தமாய் அசைந்து ஆடும் ஒரு திவ்ய தேஜசானது இடைவெளியற்று எங்கும் பரந்தது போல அவருக்குத் தோன்றியது. அவ்வாறு தோன்றிய அந்தத் தேஜோமகிமையில், எந்தச் சிறு நதியும் கங்கா நதியினுடைய கௌரவத்தை அடைந்து பகவந்நாமி பஜனையைச் செய்து கொண்டு சென்றது. சமுத்திரமோ தனது சோகத் தொனியை மறந்து சாக்ஷாத் பகவானுடைய சயன ஸ்தானமாகிய க்‌ஷீராப்தியைப் போல விளங்கி, அந்தப் பகவானுடைய குணங்களை விஸ்தரிக்கக் கம்பிரமான தனது குரல்கூடக் காணாது. அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்றபடி, கட்குடித்த ஊமை பேசத் தொடங்கினாற்போலக் கைகளையெல்லாம் நீட்டிச் சொல்லமாட்டாமற் சொல்லி ஆனந்தித்தது. மலைகளெல்லாம் சாக்ஷாத் கைலாச பர்வதத்தைப் போலக் காம்பீரியத்தை அடைந்து கடவுளுடைய ஆலயங்கள் போல நின்றன. மரங்கள் எல்லாம் நூதனமான பசிய இலைகளை ஆடையாக உடுத்துத் தேன் தெளித்துத் தாது தூவி வசந்தமாடின. புஷ்பங்களோ பகவதாராதன மகோற்சவத்தைப் பரிமளிக்க, அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடின. பட்சிகளெல்லாம், உலகையிகழ்ந்து உயரப் பறந்து, விஞ்சையர் குழாம் என விசும்பிடை நின்று கடவுளையே நோக்கிக் கானம் செய்தன. காற்று கந்தப் பொடிகளைத் தூவித் கானத்