பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

81

காரமான விரிவை அடைந்தது. அவர் அநுபவித்த ஆனந்தத்திற்கு எதுவும் ஈடல்ல. அக்காலத்தில் மற்ற எவ்விதச் சந்தோஷமும் அவருக்குக் கேவலமாகத் தோன்றிற்று. அவருடைய உள்ளக் கொதிப்பு அலைவீசி எழுந்தது. அவர் முகம் மலர்ந்த வண்ணமாகவே இருந்தது. கண் போயே போய்விட்டது. தாமே பிரம்ம மயமானாற்போன்ற ஓர்வித அறிவு அவருக்கு உண்டாயிற்று. புலன்கள் அனைத்தும் அடங்கியிருந்தன...... சொல்வதறியாத ஆனந்தத்தில் அவர் இருந்தார். அந்த ஆனந்தம் கரை கடந்து பெருகிற்று, வாய்விட்டுச் சிரிக்கவும் தொடங்கிவிட்டார். இன்ன விதமான சந்தோஷம் என்று அவருக்கு வாய் திறந்து சொல்லமட்டும் கூடவில்லை. மனத்தில் இன்னமிர்தம் ஊறிக்கொண்டே இருந்தது.[1]

இந்த அநுபவத்தைக் கேட்கும்போதே நமக்கு ஒரு பிரமிப்புத் தட்டுகிறது. அநுபூதிமான் ஒருவரே இவ்வாறு படிப்படியாகச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.

முத்துசாமி ஐயரின் பூர்ண நிலையின் வருணனையைக் கதையின் கடைசி வாக்கியமாக நிறுத்திக் கதைக்கு ஒரு நிறைவை உண்டாகுக்கிறார் ராஜமையர்.

'குரு உபதேச விசேஷத்தால் பஞ்சகோசத் திரைகளைப் பிளந்து பூரணமாய், ஏகமாய், அசலமாய் அசரீரியாய், அநாதியாய், ஆப்தமாய், நித்திய நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷயமாய் விளங்கா நின்ற சச்சிதானந்த ஸ்வரூபமாகிய ஆத்மாவைத் தரிசனம் செய்து, அகண்ட பிரம்மமாகிற விசுவரூப விருத்தியிற் பிரவேசித்து திரிபுடிரகிதமான பிரம்மானந்தத்தில் மூழ்கி, ஆத்மக்கிரீடை, புரிந்து, சமாதி நிஷ்டையில் நிர்வகித்து, சமாதி யொழிந்த சமயங்களில் பகவானுடைய மாயா விபூதியை வியந்து, ஒளியிலே; இருளிலே, வெளியிலே, மண்ணிலே,


  1. ப. 1-6-7

6