பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

    அதேபோல் Mrs. Gaskellன் Crawfordம் மெல்ல மெல்லக் கண்கள் பளிச்சிட, இதழ்கடை யோரங்கள் மட்டும் மேல் நோக்கி வளைய, யாரோ முறுவலிப்பது போல் தோன் றும். கை தேர்ந்த பொற் கொல்வரின் நகாஸ் வேலையை மெல்ல மெல்ல ரவிப்பதுபோல்தான் இதுவும். நந்தி புரத்து நாயகியின் சில பகுதிகள் இவைகளே நினைவுறுத்துகின்றன. .
    வைகையாற்றின் வர்ணனை, அது அவ்விடத்தில் வளைத் தும் குறுகியும் காணப்பட்டது. சலசலவென மணலை அரித் துக் கொண்டு வந்த அந்த நதி, பாறைகளின் வழியே புகுந்து, சமப் பகுதியில் துள்ளி, குடுகுடுவென ஓடி வந்தது. பாறை யைத் தழுவி வரும் போது பாறையின் அணேப்பில் துயின்று கொண்டிருந்த பச்சைப் பாசிக் கொடிகள், சிறிது தூரம் பிர வாகத்துடன் வரமுயன்று, பிடிக்காமலோ என்னவோ பாறையின் பிடியை விடாமல் நின்றன. ஆளுல் துள்ளித்திரி யும் மீனினங்கள் மட்டும் அங்கேயே வட்டமிட்டு அன்றைய உணவுக்கு வழி செய்து கொள்ளப் பார்த்தன. கதிரொளி யில் வெள்ளிக் கட்டி ஒன்று நீரிலே துள்ளுவது போல் தோற்றமளித்தன.
    அடுத்து நாட்டிய வர்ணனை. .
    'ஜல் ஜல் என்ற நூபுரத்தின் ஒசை கேட்டது. இன்ப வல்லியின் பாதங்கள் ஒலித்தன. வளை குலுங்கும் கரங்கள்வளைந்தன. விரல்கள் நெளிந்து நெளிந்து பல விதத் தோற்றங்களைக் காட்டின. அவை என்ன நான் முகனின் கைகளா? பல பலத் தோற்றங்களைக் காட் டின. துள்ளும் மானப் புலப்படுத்துகின்றன. அசையும் யானையை, நெளியும் பாம்பை, ஆடும் மயிலை, குவியும் மலரை விரியும் பூவை, வட்டமதியை, வானத் தாமரையை கடும்புயலை, கொடிய வில்லை, நெடிய மலையை, அடர்ந்த மரத்தை... . -
    மாளிகையின் கூடங்கள் கூட இசை கேட்டுப் பொலி வடைந்தன. சதங்கை ஒலி கேட்டுச் சிரித்து மகிழ்ந்தன. ஒரு