பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 §

ஜனநாதனின் தெளிந்த அறிவிற்கு ஒரு சான்று வேண்டுமா? இதோ இராஜ பக்திக்கும் தேச பக்திக்கும் உள்ள வேறுபாட்டை அவன் விளக்குவதைக் கேளுங்கள்.

'தம்பி, இராஜ பக்தி என்பது வேறு; தேச பக்தி என்பது வேறு. ஆளும் அரசாங்கத்தைக் கண்மூடித்தன மாகப் பின் பற்றும் பக்தி வேறு ஆளப்படும் தன் நாட்டைக் கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு....கண்மூடித் தனமான அரசாங்க தாசர்களால் கொடுங்கோன்மையும் சர்வாதிகார வெறியுமே உருவாகும்.' -

ஜனநாதன் சோழப் பேரரசின் அழிவைத் தன் இலட்சிய மாகக் கொண்டு செயல்படுகிருன். இதனைச் சோழ மன்னர் அறியாமல் இருப்பாரா? இருந்தும் ஜனநாதன் சோழ அரசியலில் இருப்பது எப்படிச் சாத்தியமாகிறது என்று வீர் சேகரன் கேட்கிருன். யானே இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே, அந்த யானை யைப் போன்றவம்ை ஜனநாதன். ஜனநாதன் அரசவை யில் இருந்தாலும் ஆயிரம் தொல்லை, இல்லாவிட்டாலும் ஆயிரம் தொல்லே என்பது சோழ மன்னருக்குத் தெரியும். அதனுல்தான் அவர் என்னை ஒன்றும் செய்வதில்லை' என்று ஜனநாதன் கூறும்போது, ஜனநாதனின் ஆற்றலை நாம் உணருகிருேம்.

வீரபாண்டியன் மனைவி' நாவலுக்குக் கதைப்படி கதாநாயகன் வீரபாண்டியன்தான்! ஆளுல், வீரசேகரன் தான் கதாநாயகனே என்ற ஐயம் முதலில் ஏற்படுகிறது. கதையைப் படித்து முடித்ததும் ஜனநாதனே கதாநாயகன் என்று முடிவு செய்கிருேம். ஒரு நாவலின் வெற்றிக்குக் காரணங்கள் பல அவற்றுள் ஒன்று பாத்திரப் படைப்பு ஜனநாதன் ஒரு முழுமையான பாத்திரப் படைப்பு: நாவலைப் படித்து முடிக்கின்றவர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை நிலையாகப் பெறுகிருன் ஜனநாதன்.