பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஐம்பெருங் காப்பியங்கள்

17

இல்லையா என்பதைப்பற்றி இரண்டோர் உரையாதல் பகராது மேலே செல்ல எனது மனமெழவில்லை. பௌத்தத்துக்கும் பூதவாதத்துக்கும் வேற்றுமையுண்டு. அவ் வேற்றுமையை மணிமேகலை வாயிலாகவே எடுத்துக் காட்டுகிறேன்.
மணிமேகலை அம்மையார் ஒவ்வொரு சமயக் கணக்கரையும் அவரவர் சமய உண்மையை உரைக்குமாறு கேட்டது போலப் பூதவாதியையும் நோக்கி அவனது கொள்கையைக் கூறுமாறு கேட்டனர். அப்பொழுது பூதவாதி சொற்றது வருமாறு:

"பூத வாதியைப் புகனி யென்னத்
தாதகிப் பூவுங் கட்டிய மிட்டு
மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங்
குற்றிடும் பூதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்
உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத உணர்வில் பூதமும்
அவ்வப் பூத வழியவை பிறக்கு
மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே
கண்கூ டல்லது கருத்தள வழியும்
இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே
பொய்ம்மை மறுமை யுண்டாய் வினை துய்த்தல்.
"

இவ்வுரை கேட்ட அம்மையார், "புத்த பீடிகையால் நாம் பழம்பிறப்புணர்ந்தது அநுபவத்திலிருக்கிறது. இவரென்ன 'இம்மையில்லை; மறுமையில்லை, மறுபிறப்பில்லை; கர்மமில்லை' என்று கழறுகிறார்" என்று நகைத்தனர்.

"என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்

தமி. 2