பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமுறைகள்

19


வில்லா இடமுண்டோ? பழம்பிறப்புணர்வோ மணி மேகலையில் பரந்தொளிர்கிறது. அவ்வற நூலின் மாண்பை என்னென்று சொல்வேன்?
வளையாபதி
இந்நூல் முற்றிலுங் கிடைக்கவில்லை. ஆன்றோர் சிலர் எடுத்துக்காட்டாகக் கொண்ட மிகச் சிலபாக்களே நாட்டில் உலவுகின்றன. அச்சில பாக்களிலும் பௌத்த அறம் உயிர் நாடியாக ஓடிக்கொண் டிருக்கிறது.
குண்டலகேசி
குண்டலகேசி பௌத்த காவியம் என்பதில் சிறி தும் ஐயமில்லை. இக்காவியம் முழுவதும் பெறும் பேற்றை இற்றைநாள் தமிழ் மக்களாகிய நாம் இழந்துநிற்கிறோம். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நீலகேசி யென்னுஞ் சமண நூல் கொண்டு குண்டலகேசியைப் பௌத்த நூல் என்று நிறுவலாம். இப்பொழுது வழக்கிலுள்ள குண்டல கேசிப் பாக்களில் பழம் பெளத்தம் ஒளிர்வது கண்கூடு. பின்னாளில் அதாவது அறநெறி குன்றிய நாளில், சமணர்கட்கும் பௌத்தர்கட்கும் பெரும் பெருஞ் சமய வாதங்கள் நடந்தமையான், ஈண்டுப் பழம் பௌத்தம் என்று சொல்லலானேன். சமணமும் பௌத்தமும் பின்னாளில் அறமென்னும் உயிர்நாடி யறப்பெற்று, வெறும் பெயர் என்னும் உடலங்களாக மட்டும் நிலவலாயின. ஒவ்வொரு சமயமும் நாளடைவில் உயிர்நாடியற்று உலவுவதாகிறது. காரணம் மக்களிடத்துள்ள குறைபாடே யாகும். இது நிற்க.

===


ச. திருமுறைகள்

இனித் திருமுறைகளை நோக்குவோம். திருமுறை என்றதுஞ் சிலர்க்குக் கலக்கம் உண்டாகலாம்: "திரு முறைக் காலந்தானே தமிழ்நாட்டில் பௌத்தத்தைச் செகுத்த காலம்" என்று சிலர் கருதலாம். சமயக்