பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமுறைகள்

21

திருநாவுக்கரசர்
"தயாமூல தர்மன்" என்னுஞ் செம்மொழி திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் மிளிர்கிறது. இம்மொழி பௌத்த தர்மத்தை முதலாகக் கொண்டது என்று சொல்ல வேண்டுவதில்லை. "நீதியால் நினை செய் நெஞ்சே", "சீலமும் நோன்பு மாவார்", "நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே" எனவரூஉஞ் சுவாமிகளின் பிறமொழி களையும் உற்று நோக்குக.
சுந்தரமூர்த்தி
"தாழாதறஞ் செய்ம்மின்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அறத்தைப் பொருளாக அருளிச் செய்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றில் பௌத்த சமயத்துக்கு அரண் செய்யத் தக்க வேறு சில குறிப்புகளுமுண்டு. அவையிற்றுள் இரண்டை ஈண்டுச் சிறப்பாகப் பொறிக் கிறேன். ஒன்று, அடிகள் கைலையில் காரிழையார் இருவரைக் காமுற்ற காரணத்தால் இவ்வுலகில் மனிதப் பிறவி யெய்தி அவ்வின்பந் துய்த்தது ; இன்னொன்று, அவர் சங்கிலியார் பொருட்டு மகிழ மரத்தடியில் கூறிய உறுதிமொழியினின்றும் பிறழ்ந்த காரணத்தான், கண்ணிழந்த நாள் தொட்டு ஆண்டவனைச் "சீலமே" என்றும், "பண்ப" என்றும் விளித்து விளித்துப் பாடியது. இன்னும் மற்றத் திருமுறைகளிலும் புத்தர் பெருமான் அறத்தை அறிவுறுத்துஞ் செம்மொழிகள் பலவுண்டு. அவைகளை இங்கே விரிக்கிற் பெருகும்.
ஊமைப் பெண்
மாணிக்கவாசக சுவாமிகள் வரலாற்றில் ஈண்டொன்று நினைவிற்கு வருகிறது. அதாவது மாணிக்க வாசகனார் ஊமைப் பெண்ணைப் பேசவைத்துப் பெளத்தர்களை வாதில் வென்றனரென்பது. இதற்குச் சான்றாகப் "பூசுவதும் வெண்ணீறு" என்னுந் திருப்பதிகங் காட்டப்படுகிறது. அப்பதிகத்தில் வினாவிடைகள் பெரிதுமிருக்கின்றன. ஊமைப் பெண் குறிப்பு யாண்டாதல் உண்டா என்று ஆராய்தல் வேண்டும். அக்குறிப்பே அப்பதிகத்திலில்லை.