பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பராமாயணம்

25

வந்தது. அச் "சிரம்" எனது கண்ணுக்குப் புலனாகாதிருந்தால், "திற"த்தின் கதி யென்னவாயிருக்கும்? பின்வருவோர்க்கு அது பெருவிருந்தா யிருக்கும்!
பின்னாளில் புத்திபூர்வமாவும் அபுத்திபூர்வமாகவும் பிழை நிகழ்தல் இயல்பு. அப்பிழைபாடுகளைச் சரித்திர உலகிலேற்றுவது ஆராய்ச்சிக்காரர் செயலன்று என்று சொல்கிறேன். சரித்திர உலகம் என்பது தனியாக நிற்பது. அதற்குத் துணைசெய்யுங் கருவிகளுஞ் சான்றுகளுமே கொள்ளற்பாலன. சரித்திர உலகிற்கும் ஆராய்ச்சி உலகிற்கும் அடங்காது கடனாற்றுவோரைப்பற்றி நாம் கவலையுற வேண்டுவதில்லை.
பெரியபுராணம்
திருமுறைகளுள் இறுதியது பெரியபுராணம். இப் புராணத்துள்ளும் பௌத்த தர்மம் நுழைந்திருக்கிறது. இப்புராணம் வேள்வியை "ஊனமில் வேள்வி" என்று புகல்கிறது. ஊன் வேள்வியை ஊனமில் வேள்வியாகச் செய்தது எது? புத்தர் பெருமான் அறமன்றோ? திருமுறைகள் பௌத்த மதத் தத்துவங்களை மறுத்துரைப்பினும், பௌத்த சீலங்களை ஏற்றுக்கொண்டிருத்தல் கருதத்தக்கது.

------
ரு. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தனியாக மேலே குறிப்பிட்டிருக்கிறேன். கம்பராமாயண காலத்தை ஒரு தனிக் காலமென்று கூறுவது மிகையாகாது. வடமொழியும் தென்மொழியும் தமிழ்நாட்டில் முழு ஆக்கம் பெற்றிருந்த காலத்தில் கம்பர் புலவராக விளங்கினவர். இருமொழி நாகரிகக் குறிப்புக்களையுங் கம்பராமாயணத்தில் பரக்கக் காணலாம். கம்பர் சமண பௌத்த காவியங்களை நன்கு பயின்றிருந்தார் என்பதற்கு அவர் இராமாயணத்தில் பல சான்றுகளுண்டு. அவைகளுள் சிலவற்றையாதல் உங்கள்