31
அகத்தூய்மை . புத்தர் பெருமான் திருவுருவம் அகத் தூய்மைக்குரிய அறத்தை நினைவூட்டும் ஓர் அறிகுறி என்பதே ஈண்டுக் கருதற்பாலது. இப்பொழுது மறத்தய்ந்து அறம் வளரல் வேண்டும். அவ்வற வளர்ச்சிக்குப் பழம் பௌத்தம் பெருந்துணை செய்யும் என்பதில்லை யமில்லை .
தொண்டர்களின் இயல்
பௌத்த அறத்தை வளர்க்கப் புகுந் தொண்டர்கள் பகைமை பொறாமை
முதலிய எரிகள் கனன்றெழாமுறையில் சேவை செய்தல் வேண்டும்.
பிற சமயத்தார் மனம் புண்படு முறையில் எவருந் தொண்டாற்றலாகாது. விலங்கு நீர்மையினின்றும் விலகி மெய்யறிவு விளங்கப் பெறுவதே பௌத்தம் என்பது. பௌத்தம் என்பது, பகைமை பொறாமை முதலிய பேய் நீர்மைகளினின்றுங் கடந்தொளிர்வது. அத்தகைய ஒன்றைப் பகைமை பொறாமையிற் படுத்தலாகாது. சமரச வுணர்வும், அறவுணர்வுங் கொண்ட பௌத்த தர்மப் பிரசாரம் இப்பொழுது வேண்டும்; வேண்டும். அத்தொண்டாற்ற எழுங்கள்; எழுங்கள்.
எனக்குத் தந்த காலவரை சிறிது கடந்தும் விட்டது. அன்பர்களே! இதுகாறும் பொறுமையுடன் எனது இன்மொழிகளைச் செவிமடுத்த உங்களுக்கு எனது வணக்கம். எனது பேச்சில் குற்றங் குறைகளிருக்கலாம்; கருத்து வேற்றுமைகளு மிருக்கலாம். யான் மனிதன்; தவறுதலுக்கு ஆளாவோன்; மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.