பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 87

அது மட்டும் அல்ல. ஊரிலே இருப்பவர்கள் எல்லாம் இழித்துப் பேசுவார்கள்; அவமதிப்பு உண்டாகும் என்று தியாயம் பேசுகிறது. இப்படி உணர்ச்சியும் அறிவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுக்க, அவன் தடுமாறுகின்றான்; அவன் உடம்பு மெலிகிறது. பழங் கயிறு ஒன்றை ஒவ்வொரு புரியாக அற்று மெலிவது போல

அவன் உடம்பு மெலிகிறது. - -

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் உண்டான போராட் டத்தில் அகப்பட்ட அவன் தன் நிலைக்குத் தேய்புரிப் பழங்கயிற்றை உவமை சொல்கிறான்.

'புறம்தாழ்பு இருண்ட கூந்தல் போதின்

கிறம்பெறும் ஈர்இதழ்ப் பொலிந்த உண்கண், உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்கம் செல்வாம்' என்னும், செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யா மையோடு இளிவுதலைத் தரும் என, உறுதி தூக்கத் தூங்கி, அறிவே *சிறிதுருனி விரையல் என்னும்; ஆயிடை ஒளிறு எந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல, - விவது கொல்என் வருந்திய உடம்பே." (புறம் தாழ்பு:முதுகிலே தழைந்து. போதின்தாமரைப் பூவின். ஈர் இதழ்-ஈரமான இதழ். செல்லல் திர்கம்.துன்பம் நீங்குவோம், செல்வாம்-போவோம். எவ்வம்-துயரம். எய்யாமை-அறியாமை இளிவுஅவமதிப்பு. விரையல்-அவசரப்படாதே. 'ஆயிடைஅவற்றுக்கிடையில், வீவது கெர்ல்-அழிவதோ)

இதைப் பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. இந்தப்பாட்டில் அவர் கூறும் அருமையான உவமையைக்