பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 89

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு பத்திரிகை யடிக்கிறோம். எதிர் வீட்டுக்காரர் வாய்நிறையத் தண்ணீரை வைத்துக்கொண்டு லாசலில் வந்து துவென்று துப்புகிறார். நம்மைக் கண்டு அவமதிப்பாக எண்ணியே அப்படிச் செய்கிறார். ஒவ்வொரு நாளும் இப்படியே செய்து வருகிறார். . . . .

அவர் இறந்து போகிறார். ஒவ்வொரு நாளும் காலையில் அந்த நேரத்தில் நாம் பத்திரிகை படிப்பதும், எதிர் வீட்டுக்காரர் எரிச்சலோடு துப்புவதும் வழக்கமாகி விட்டவை. இப்போது அந்த நேரத்தில் அவர் துப்பும் நிகழ்ச்சி நின்றுவிட்டது. நம் நண்பர் ஒருவர் வருகிறார். எதிர் வீட்டுக்காரரைப்பற்றிக் கேட்கிறார் ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் வாசலில் வந்து காறித்துப்புவான். இப்போது வெறிச்சோ என்றிருக்கிறது' என்கிறோம். அந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சியைக் கண்டு பழகி விட்டோம். இப்போது அது இல்லாமல் அந்த நேரம் வெறிச்சோடுகிறது. - . . . .

இத்தகைய அநுபவத்தோடு ஒட்டிப் பார்த்தால், "பழகிய பகையும் பிரிவு இன்னாதே' என்ற அருமையான கருத்து நன்றாக விளங்கும். - . . .

மற்றோர். உதாரண்மும் பார்க்கலாம்: மிகவும் கொடிய நோயால் வருந்தும் ஏழைகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அழுகி ஒழுகும் தொழு நோயாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகப் போகிறது. அவர்கள் படுகிற துன்பத்தோடு மற்றவர்கள் அருவருப்பாகப் பார்க்கும் பார்வை வேறு. . . .

. இத்தகைய அல்லல்களுக்கு உள்ளான உடம்பை - விட்டுப் பிரிவது நல்லது என்று நமக்குத் தோன்றுகிறது. தற்கொலை செய்துகொள்ள வழியா இல்லை; ஆனாலும்