பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. குறுந்தொகை

உள்ளம் ஒன்றுபட்டது காதல் என்று உலகத்துக் கவிஞர்களெல்லாம் பாடியிருக்கிறார்கள். ஆனால் தமிழர் கொள்கை, உயிரும் ஒன்றுபட்டது காதல் என்பது அதாவது, ஒருவனும் ஒருத்தியும் காதல் செய்வது என்பது இந்தப் பிறவியில் புதிதாக ஏற்பட்டது அன்று; முன் பிறவிகளில் உண்டான தொடர்பே, இந்தப் பிறவியில் மறுபடியும் வந்து இசைகிறது. ஒவ்வொரு பிறவியிலும் காதலர்கள் கணவன் மனைவியராகவே வருவார்கள் என்பது தமிழர் நம்பிக்கை. இதனால் காதலின் புனிதத்

தன்மையும் சிறப்பும் மிகுதியாகின்றன.

இந்தக் கொள்கையைச் சங்கப் பாட்டு ஒன்றில் காணலாம். அந்தப் பாட்டை ஆலவாயில் எழுந்தருளி யிருக்கும் இறைவனாகிய சுந்தரேசப் பெருமானே பாடினான் என்று சில புராணங்கள் சொல்கின்றன. இந்த அடிப்படையான கொள்கையைத் தெய்வமே வரை யறுத்துச் சொல்லியிருக்கிறது என்று சொல்வதனால் அதற்குத் தனியே ஒரு சிறப்பு உண்டாகும் என்று தமிழர் கருதியிருக்கலாம். -

அது சம்பந்தமாக வழங்கும் கதை வருமாறு:

பாண்டியன் தன் மனைவியின் கூந்தலில் இயற்கை யாக மணம் இருப்பதை அறிந்தான். அதை ஊகித்