பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை - 93

ஒரு காதலன் தன் காதலியுடன் அளவளாவி அவ ஆளுடைய அழகையும் மென்மையையும் பாராட்டுகிறான். அப்போது அவளுடைய கூந்தல் இயற்கையில் மனம் உடையதாக இருப்பதைச் சொல்லி வியக்கிறான். ஒரு வண்டைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்கிறான்.

'பூந்தா தைத் தேருகின்ற வாழ்க்கையை உடைய அழகிய சிறகைப் பெற்ற தும்பியே, என் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்பச் சொல்லாமல், நீ உன் அநுபவத் தில் அறிந்ததைச் சொல். பிறவிதோறும் நெருங்கிப் பழகி அமைந்த காதலையும், மயிலின் மென்மையையும், நெருங்கின் பற்களையும் உடைய இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல மணம் வீசும் பூ நீ அறிந்தவற்றில் உண்டோ?' என்பது பாட்டின் பொருள். .

எந்தப் பூவுக்கும் இல்லாத ஒரு நறுமணம் இயல் பாகவே தன் காதலியின் கூந்தலில் அமைந்திருக்கிறது என்ற கருத்தையே இந்த வகையில் அமைத்துச் சொல் கிறான் காதலன். இங்கே, பயிலியது கெழி இய நட்பு" என்று தம்மிடையே உள்ள காதலைச் சொல்கிறான். இன்றுதான் அவளைக் கண்டிருக்கிறான்; என்றாலும், 'இந்தக் காதல் இன்று உண்டானது அன்று; பிறவி தோறும் பழகி அமைந்தது என்பதையே அப்படிச் சொல்கிறான். காதலின் சிறப்பை இவ்வாறு சொன்ன தனால் இது தெய்வத்தன்மை பொருந்திய பாட்டாயிற்று.

இந்தப் பாட்டு, எட்டுத்தொகையில் ஒன்றாகிய குறுந்தொகையில் இரண்டாவது பாட்டாக இருக்கிறது. இந்தக் கருத்தையுடைய வேறு ஒரு பாட்டும் இந்த நூலில் இருக்கிறது. அம்மூவனார் என்ற புலவர் பாடியது அது.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப, -