பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழ் நூல் அறிமுகம்

இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆ கியர்என் கணவனை; யான்ஆ கியர்கின் நெஞ்சுநேர் பவளே'

என்பது பாட்டு. அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீல மணியினது நிந்த்தை ஒத்த கரிய நீரையம் உடைய கடற்கரையை யுடைய தலைவனே! இப்பிறவி நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டானாலும், என்னுடைய கணவன் நீயே ஆகுக!. நின்னுடைய மனத்துக்கு ஒத்த காதலி யானே ஆகுக' என்பது இதன் பொருள். - .

இங்கே காதலி தனக்கும் தன் காதலனுக்கும். வரும்: பிறவியிலும் தொடர்பு உண்டாக வேண்டும் என்கிறாள். முன்னே சொன்ன பாட்டில் காதலன், முற்பிறவித். தொடர்பைச் சொன்னான். இந்தப் பாட்டில் காதலி வரும் பிறவித் தொடர்பைச் சொல்கிறாள். இவற்றால் காதல் பிறவிதோறும் தொடர்வது என்ற கருத்துப் புலனா கிறது. -

இந்த இரண்டு பாடல்களையும் கொண்ட குறுந் தொகை கடவுள் வாழ்த்து ஒன்றும் அகப்பொருள் அமைந்த 401 பாடல்களும் கொண்டது. நானுாறு பாடல் களே இருக்க வேண்டும். ஏதோ ஒரு பாடல் மிகை யென்று தோன்றுகிறது. நாலடி முதல் எட்டடி வரையில் உள்ள பாடல்களை உடையது இந்தத் தொகை நூல். "இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை. பாடிய கவிகள் இரு நூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும். தொகுக்கப்பட்டது' என்ற குறிப்பு ஏட்டுச் சுவடிகளில், உள்ளது. அதனால் இதில் நானுறு பாடல்களே இருக்க வேண்டுமென்று தெரிகிறது. 307-ஆம் பாட்டில் 9