பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை - 95.

அடிகள் இருக்கின்றன. அதை விலக்கினால் 400 பாடல்கள் என்ற கணக்கு வரும்.

இந்த நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்ற புலவர். அவரைத் தொகுக்கும்படி சொன்னவர் இன்னார் என்று தெரியவில்லை. இந்த நூலின் முதல் 880 பாடல் களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், பின் இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதினார். என்றும் தெரியவருகிறது. அவை இப்போது கிடைக்க வில்லை. இந்த நூலை முதல்முதலில் உரை எழுதி அச்சிட்டவர் திரு செளரிப்பெருமாள் அரங்கன் என்பவர். பிறகு டாக்டர் ஐயரவர்கள் திருத்தமான முறையில் விரிவான உரையுடனும் ஆராய்ச்சியுரை முதலியவற்றுட. னும் புலவர்களுக்கு ஒரு கருவூலம் போல இருக்கும்படி பதிப்பித்திருக்கிறார்கள். - -

சங்க நூல்களைத் தொகுக்கும்போது முதல் முதலாகக் குறுந்தொகையைத் தொகுத்திருக்க வேண்டும். அதற்குரிய காரணங்களை ஐயரவர்கள் காட்டியிருக்கிறார்கள். உரையாசிரியர்கள் மிகுதியாக இந்த நூற்பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சிறிய அடியளவுடைய நூலாதலின் குறுந்தொகை' என்று: பெயர் பெற்றது. - -

- - காதலின் சிறப்பை மிக அருமையாகச் சொல்லும் பாடல்கள் பல இந்த நூலில் இருக்கின்றன. - - 'கிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே, சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு கட்பே' என்பது ஒரு பாட்டு. தேவகுலத்தார் என்னும் புலவர் பாடியது இது. மலைப்பக்கத்தில் உள்ள கரிய கொம்பு