பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஐங்குறுநூறு

அகப்பொருளுக்குரிய மருதம், நெய்தல், குறிஞ்சி பாலை, முல்லை என்னும் ஐந்து திணைகளுள் ஒவ்வொன் றுக்கும் நூறு நூறு பாடல்கள் அமைந்த நூல் ஐங்குறுநூறு. குறும்பாடல்கள் நூறு அடங்கிய ஐந்து பகுதிகளை உடையதாதலின் இந்தப் பெயர் பெற்றது. இதில் உள்ள பாடல்கள் மூன்றடிமுதல் ஆறடி வரை யிலும் அமைந்தவை. ஒவ்வொரு திணையையும் ஒவ்வொரு புலவர் பாடியிருக்கிறார். நூலுக்குக் கடவுள் வாழ்த்தாக உள்ள பாட்டைப் பாரதம் பாடிய பெருந்: தேவனார் பாடியிருக்கிறார். அதனோடு சேர்ந்து இந்த நூலில் 50 பாடல்கள் உள்ளன. மருதத் திணைக்குரிய நூறு பாடல்களை ஒரம் போகியாரும், நெய்தல் திணைப் பாடல்களை அம்மூவனாரும், குறிஞ்சிப் பாடல்களைக் கபிலரும், பாலைக்குரிய பாடல்களை ஒதலாந்தையாரும் முல்லைக்குரியவற்றைப் பேயனாரும் பாடியுள்ளனர். இந்தத் தொகைநூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். அவரைத் தொகுக்கும்படி செய்தவர் யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை என்ற சேர் அரசர். . . . .

ஒவ்வொரு பத்துப் பாட்டுக்கும் ஒவ்வொரு தலைப்பு உண்டு. மொத்தம் ஐம்பது தலைப்புக்களை உடைய பத்துப் பத்துப் பாடல்கள் இந்த நூலில் உள்ளன.