பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் நூல் அறிமுகம்

முதல் பத்துக்கு வேட்கைப் பத்து என்று பெயர். கடைசிப் பத்துக்கு வரவுச் சிறப்புரைத்த பத்து என்று பெயர். மற்றப் பத்துக்களுக்கும் இப்படியே வேறு வேறு பெயர்கள் உண்டு. - .

இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது மிகவும் சுருக்கமானது. அதனை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை. இந்த நூலை முதல் முதலாகக் கண்டெடுத்துப் பதிபித்தவர்கள் மகாமகோபத்தி யாய டாக்டர் ஐயரவர்கள். -

இந்த நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமானைப் பற்றியது. இறைவனுடைய திருவடி நிழலிலிருந்து மூவகை உலகமும் தோன்றின என்பதை அழகாகச் சொல்கிறார் பெருந்தேவனார். அருவாக இருக்கும் இறைவன் உலகத்தைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொண்டபோது உ ரு வ த் ைத மேற்கொண்டான். அப்படி மேற்கொண்ட உருவங்களில் மிகப் பழையது மாதிருக்கும் பாதியனாகிய அர்த்தநாரீசுவரத் திருவுருவம். ஒரு பாதி அம்பிகையும் ஒரு பாதி இறைவனுமாக இணைந்து விளங்குவது அந்தத் தெய்வத் திருவடிவம். இரண்டு பாதி வடிவம் சேர்ந்த ஒருருவத்துக்கு இரண்டு திருவடிகள் உள்ளன. அந்த இரண்டு திருவடிகளிலிருந்து மூவகை உலகங்களும் தோன்றின. -

இவ்வாறு சொல்கிறார் பெருந்தேவனார்:

நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் கிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. (நீலத் திருமேனியையும் தூய ஆபரணங்களையும்

உடைய அம்பிகையை ஒரு பாகத்தில் உடைய தனிப் பரம்பொருளாகிய சிவபெருமானுடைய இரண்டு