பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 99.

திருவடி நிழலின்கீழ் மேல், நடு, கீழ் என்ற மூன்றுவகை

உலகங்களும் முறையாகத் தோன்றினர்.

இந்தப் பாட்டில் அரை, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்களை அடுக்கிக் கருத்தை விளக்குகிறார் ஆசிரியர்.

தலைவன் பரத்தையை நாடி சென்றிருந்தபோது இல்லத்திலிருந்து அறம் காக்கும் தலைவி இறைவனை நினைந்து வேண்டிக் கொள்கிறாள். அவளுட்ைய தோழி யர்கள் அந்தத் தலைவிக்கு நன்மை உண்டாக வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறார்கள்.

முதல் பத்தாகிய வேட்கைப் பத்திலுள்ள பாடல்கள் இந்த இருவகையினருடைய வேண்டுகோளையும் சொல் கின்றன. தலைவியின் வேட்கையில் அவளுடைய பரந்த மன இயல்பு வெளிப்படுகின்றது. அரசன் வாழ்க’ என்று அவள் வாழ்த்தத் தொடங்குகிறாள். பிறகு, எங்கும் நெல் நன்றாக விளையட்டும்; பொன் சிறக் கட்டும்' என்று வாழ்த்துகிறாள். வயல்கள் விளைக; இரவலர் வருக என்பதும் அவளுடைய வேண்டுகோள், “பசு மாடுகள் பால் சுரக்கட்டும்; காளை மாடுகள் சிறப்பாக வாழட்டும் என்றும் வாழ்த்துகிறாள் பகை வர்கள் தோல்வியுறட்டும்; அந்தணர்கள் வேதத்தை ஒதட்டும் என்றும், பசி இல்லாமற் போகட்டும்; பிணி நீங்கட்டும்’ என்றும், வேந்தன் பகை தனியட்டும்’ *அவன் பல ஆண்டுகள் வாழ்க’ என்றும், அறம் நனி சிறக்க, அல்லது கெடுக' என்றும், அரசு முறை செய்க; களவு இல்லை யாகுக' என்றும் அவள் வாழ்த்துகிறாள். இறுதியில், நன்மை மிகவும் சிறக்கட்டும்; தீமை இல்லாமற் போகட்டும் என்றும், மழை பெய்யட்டும்: வளம் பெருகட்டும் என்றும் வாழ்த்துகிறாள்.