பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் நூல் அறிமுகம்

ஒரு பெண்ணின் இளமைத் தன்மையை அந்தப் பெண்ணின் காதலனுக்கு எடுத்துச் சொல்கிறாள் தோழி.

அந்த இளம் பெண் கடற்கரையில் மணலில் விளையாடுகிறாள். அங்கே சிற்றில் கட்டிச் சிறிய பொம்மையை மணலால் செய்து வைத்து விளையாடு கிறாள். அப்போது கடலலை வந்து மோதி அந்த வீட்டை யும் பொம்மையையும் அழித்துவிடுகிறது. அந்த இளம் பெண்ணுக்குக் கடலின் மேல கோபம். கை நிறைய மணலை வாரிக்கடலில் போடுகிறாள்; உன்னைத் தூர்த்துவிடுகிறேன், பார்’ என்று சொல்லி ஆத்திரத். துடன் மணலைப் போடுகிறாள்! இத்தகைய பேதை மையையுடைய உன் காதலியைக் கண்டோம் என்று. சொல்கிறாள் தோழி.

கண்டிக்கும் அல்லமோ கொண்க கின் கேளே? வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல் துார்ப்போளே!

(நெய்தல்நிலத் தலைவனே! உன் காதலியை நாங்கள் கண்டோம் அல்லவா? அவள் விளையாட்டுப் பொம்மை யைக் கடல் கவர்ந்து கொண்டமையால், நுண்ணிய மணலைக் கையில் எடுத்துக் கடலைத் துர்க்கிறாள்!)

பேதைத் தன்மையை இரண்டு வரிகளில் அழகாகச் சொல்லிவிடுகிறாள் தோழி. - -

தன் காதலனோடு சென்று மணம்செய்து கொண்டு. மீண்டு வந்திருக்கிறாள் காதலி. அவளுடைய தோழி, "நீ இங்கே வள வாழ்வில் வாழ்ந்தவளாயிற்றே: போன இடத்தில் இந்த வசதிகள் உண்டா? எப்படி அங்கே காலம் கழித்தாய்?' என்று கேட்கிறாள். அதற்கு, விடை கூறுகிறாள் காதலி. -