பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஐங்குறுநூறு 101

'இங்கே எனக்கு எல்லா வசதிகளும் இருந்தன. என்றாலும். என் காதலனுடன் வாழும் இடந்தான் எனக்குச் சிறந்தது. அங்கே வளம் குறைந்திருந்தாலும் அந்த வாழ்வுதான் எனக்கு இனியது' என்று சொல்ல வருகிறாள். வேறு வகையில் அந்தக் கருத்துப் புலப்படச் சொல்கிறாள். இங்கே தேனும் பாலும் கலந்து உண்டேன். அங்கே அவர் ஊரில் மிகத் தாழ்ந்த பள்ளத்தில் தழைகள் விழுந்து ஊறியிருக்கும். அந்தத் தழையின் கீழே நீர் இருக்கும். அதை மான்கள் குடிக்கும். அவை குடித்தது போக எஞ்சிய நீராக இருந்தாலும் அதை உண்டேன். இங்கே உண்ட தேனையும் பாலையும்விட அந்த நீர் எனக்கு இனிமையாக இருந்தது' என்று கூறுவதாகக் குறிஞ்சித் திணையில் ஒரு பாட்டு வருகிறது:

அன்னாய் வாழிவேண்டு அன்னை; நம் படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய, அவர்காட்டு உவலைக் கூவற் கீழ் மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

(தோழி, வாழ்க; நான் சொல்வதை விரும்பிக் கேள். நம் தோட்டத்தில் உள்ள தேனோடு கலந்து உண்டபாலை விட அவர் நாட்டில் தழை விழுந்த கிணற்றின் அடியில் உள்ள, மான் உண்டு மிஞ்சிய கலங்கல் தண்ணிர் எனக்கு இனியது.) * , , -

தலைவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையே இன்ப மானது என்ற கருத்தை இந்தப் பாட்டுப் புலப் படுத்து கிறது. - -

இப்படிச் சிறந்த கருத்துக்களைச் சில அடிகளாலே சுவை பெறத் தெரிவிக்கும் பாடல்களை உடையது

ஐங்குறுநூறு. - . . .

த-7