பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பதிற்றுப்பத்து

பழந்தமிழ் நாட்டில் மூவேந்தர் அரசாண்டு வந்தனர். சேர சோழ பாண்டியர் ஆகிய மூவரும் முடியுடை மன்னர்கள். அவர்கள் வீரத்தாலும் கொடை பினாலும் சிறந்து நின்றவர்கள். அவர்களைப் புலவர் பாடிய பாடல்கள் பல. - .

இந்த மூன்று குலமன்னர்களில் சேரனைப் பாடிய நூறு பாடல்கள் அடங்கிய தனி நூல் ஒன்று எட்டுத் தொகையில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதற்குப் பதிற்றுப்பத்து என்பது பெயர். பத்தாகிய பத்து என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வகைச் செய்யுளிலும் பத்து அமையப் பத்து வகைச் செய் யுளால் நூறு பாடல்கள் அமைந்த அந்தாதிக்கும் பதிற்றுப் பத்தந்தாதி என்று பெயர் வழங்கும்.

பத்துச் சேரர்களைப் பத்துப்பத்து அகவற் பாக்கள் பாட, அந்த நூறு பாடல்களும் சேர்ந்த தொகை நூலே பதிற்றுப்பத்து. இந்த நூலுக்கு ஒரு கடவுள் வாழ்த்து இருந்திருக்கவேண்டும். இப்போது இந்த நூலின் கடவுள் வாழ்த்தும் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்க வில்லை. மற்ற எண்பது பாடல்களையும் டாக்டர் மகா மகோபாத்தியாய ஐயரவர்கள் பழைய உரையுடன் பதிப் பித்திருக்கிறார்கள்.