பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16, பதிற்றுப்பத்து 108

இதில் உள்ள பாடல்கள் புறத்திணையில் அமைந் தவை. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் இன்ன துறை யைச் சேர்ந்தது அது என்ற குறிப்பு இருக்கிறது. அதோடு ஒசை வகையாகிய வண்ணம் இன்னதென்றும், தானமாகிய தூக்கு இன்னதென்றும் காட்டும் குறிப்பு களும் உள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் வரும் சிறப்பான தொடரை அந்தப் பாட்டின் பெயராக அமைத்திருக் கிறார்கள். முன்பு நாம் அறிந்த பத்துப்பாட்டில் ஒன்றுக்கு மலைபடுகடாம் என்ற பெயர் அந்த வகையில் அமைந்திருக்கிறது. -

ஒவ்வொரு பத்துப்பாட்டின் இறுதியிலும் அந்தப் பாடல்களால் புகழப் பெற்ற அரசனையும், அவனுடைய அரிய செயல்களையும், பிற வரலாற்றையும் அவனைப் பாடினவர் பெயரையும், அவர் பெற்ற பரிசிலையும் அந்தச் சேர அரசர் ஆண்ட ஆண்டுகள் இத்தனை என்ப தையும், பத் து ச் செய்யுட்களின் பெயர்களையும் புலப்படுத்தும் பதிகம் என்ற உறுப்பு இருக்கிறது. அது அகவலாகத் தொடங்கி, உரைநடையாக முடியும். அந்தப் பதிகங்களின் ஆசிரியர் இன்னாரென்று தெரிய வில்லை. நான்காம் பத்தில் உள்ள பாடல்கள் அந்தாதி யாக அமைந்துள்ளன.

இதற்கு உரை எழுதினவர் பெயர் தெரியவில்லை. மிகச் சுருங்கிய அளவில் குறிப்புரையாக இருக்கிறது. -

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டிய சேரன் செங்குட்டுவனைப் பற்றிய செய்திகள் அந்நூலின் மூன்றாவது பகுதியாகிய வஞ்சிக் காண்டத்தில் வருகின் றன. அந்தச் செங்குட்டுவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் புகழைச் சொல்வது இரண் டாம் பத்து. முதல் பத்துக் கிடைக்காமையால் இப்போ