பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ் நூல் அறிமுகம்

துள்ள நூலில் இந்த இரண்டாம் பத்தே முதலில் இருக் கிறது. அதைப் பாடியவர் குமட்டுர்க் கண்ணனார் என்பவர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தளவும் சென்று தன் வெற்றியை நிலை நாட்டினவன். அவன் யானைமேல் ஊர்ந்து சென்று பகைவரை அழித்ததற்கு யானைமேல் சென்று முருகன் சூரபன்மனை அழித்ததை உவமை கூறுகிறார் புலவர். கடம்பர்களை வென்று அவர் களுடைய காவல் மரமாகிய கடம்பை வெட்டி அதனால் முரசு பண்ணிக் கொண்டான். நயம் இல்லாத வன் சொல்லைச் சொன்ன யவனர்களைப் பின்கட்டாகக் கட்டி அவர்கள் தலையில் எண்ணெயை வழிய விடச்செய்து, அழைத்து வந்தான். அவன் ஐம்பதெட்டு ஆண்டு. ஆட்சி புரிந்தான்.

இந்தப் பத்தைப் பாடிய புலவர்க்கு ஐந்நூறு ஊர் அளித்தான்.அரசன். அவற்றோடு தென்னாட்டில் வரும் வருவாயில் பாதியை முப்பத்தெட்டு ஆண்டுகள் அவருக் குக் கொடுத்து வந்தானாம். - ,

இந்தப் பத்தின் முதல் பாட்டுக்குப் புண்ணுமிழ் குருதி’ என்று பெயர். சேர அரசன் தன் வேலால் பகை வர்களைக் குத்தியபொழுது அவர்களுடைய மார்பு கிழிந்து அந்தப் புண்ணிலிருந்து வழிந்து இரத்த வெள்ளம் பாய்ந்து நீலநிறமுடைய உப்பங்கழியின் நீர் குங்குமக் குழம்புபோல நிறம் மாறிவிட்டதாம். இதைச் சொல்லும் பகுதி, -

'செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்பு

அருகிற திறந்த புண்உமிழ் குருதியின் மணிகிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல'