பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பதிற்றுப் பத்து 10 5

என்பது. இங்கே புண் உமிழ் குருதி' என்ற தொடர் வருகிறது. அதுவே பாட்டின் பெயராயிற்று. இப்படியே ஒவ்வொரு பாட்டுக்கும் பெயர் உண்டு.

மூன்றாவது பத்தைப் பாடியவர் பாலைக் கெளதம னார். பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடியது அந்தப் பத்து. அந்த அரசன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடைய தம்பி இப்படியே ஒவ்வொரு பத்தை .யும் ஒவ்வொரு சேர அரசனைச் சிறப்பித்து வேறு வேறு

புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

ஐந்தாம் பத்து செங்குட்டுவனைப் பற்றியது; பரணர் பாடியது. அந்தப் பத்தின் பதிகத்தில், செங்குட்டுவன் கண்ணகிக்குப் படிமம் அமைக்கக் கல் கொள்ளும் பொருட்டு வடக்கே சென்றதும், ஆரிய மன்னரை வென்றதும், படிமக் கல்லைக் சுங்கையாற்றில் நீராட்டி வந்ததும் ஆகிய செய்திகள் வருகின்றன.

"கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கான்கவில் கானம் கணையிற் போகி ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி.'

இந்தப் பத்தைப் பாடிய பரணருக்கு அரசன் உம்பற் காடு என்னும் பகுதியில் வரும் வருவாயையும், தன் மகனாகிய குட்டுவன் சேரலையும் கொடுத்தானாம்.

இந்த நூலில் உள்ள செய்யுட்கள் சேர மன்னர்களின் வெற்றிச் சிறப்பையும் கொடைப் பெருமையையும் விரிவாகச் சொல்கின்றன. அவர்களால் பகையரசர் நாடுகள் அழிந்து பாழான செய்தியைச் சொல்லும் பகுதிகள் இப்படியும் செய்திருக்க வேண்டுமா?" என்ற எண்ணத்தை உண்டாக்கும். இது பற்றி டாக்டர்